PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM

சென்னை தண்டையார்பேட்டையில், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை, த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், ஆர்.கே.நகர் த.வெ.க., – எம்.எல்.ஏ.,வும், தமிழக நிதி அமைச்சருமான மரியவில்சன் ஆகியோர் சமீபத்தில் திறந்து வைத்தனர்.
பின், மரியவில்சன் பேட்டியளிக்கும் இடத்திற்கு வந்தபோது, 50க்கும் மேற்பட்ட த.வெ.க.,வினர் அவரை சூழ்ந்து, ‘ரீல்ஸ்’ எடுக்கும் மும்முரத்தில் செய்தியாளர்களையும், வீடியோ – புகைப்படக் கலைஞர்களையும் இடித்து தள்ளினர். ஒரு கட்டத்தில் மரியவில்சனே தட்டுத் தடுமாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘த.வெ.க., ரீல்ஸ் கும்பலால, நம்மால செய்திகள் சேகரிக்க முடியலையே... லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்கோம்னு சொல்ற முதல்வர் விஜய், இந்த ரீல்ஸ் கும்பலுக்கும் கடிவாளம் போட்டா நல்லாயிருக்கும்’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
