தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘கேட்டதும் சிட்டா பறந்துட்டாரே!’

‘கேட்டதும் சிட்டா பறந்துட்டாரே!’

‘கேட்டதும் சிட்டா பறந்துட்டாரே!’

1


PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, தாப்பாத்தி பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்பட்டுள்ள நுாலகத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.

த.வெ.க.,வைச் சேர்ந்த, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, நுாலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, முகாம் மக்களிடம் குறைகள் குறித்து கேட்ட அமைச்சர், ‘எந்த குறையும் இல்லாமல் உங்களை பார்த்துக் கொள்ளும்படி அதிகாரிகளிடம் சொல்லி உள்ளோம். இது, அண்ணன் விஜய் ஆட்சி; எது வேண்டுமானாலும் உரிமையோடு கேளுங்க’ என்றார்.

உடனே அவர்கள், ‘இங்கு உயர்நிலைப் பள்ளி வேண்டும்’ என கேட்க, பக்கத்தில் இருந்த கலெக்டர் விஷு மகாஜனிடம், ‘சார் அது என்னன்னு கொஞ்சம் பார்த்துக்கோங்க’ என்றபடியே அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார்.

இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘எதுவும் கேட்க மாட்டாங்கன்னு அமைச்சர் நினைச்சிருப்பார்... பள்ளிக்கூடம் வேணும்னதும் சிட்டா பறந்துட்டாரே’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us