PUBLISHED ON : ஏப் 23, 2025 12:00 AM

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அடிக்கடி கிளம்பி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு போய் விடுகிறார். பி.ஆர்.ஓ.,வுக்குக் கூட விஷயத்தை தெரிவிப்பது இல்லை.
முதல்முறை முழு உடல் பரிசோதனைக்கு போய் வந்துள்ளார். 'ரிப்போர்ட்' திருப்தியா வந்துள்ளது. அதன்பின் சின்ன தலைவலி, சற்று சோர்வாக இருந்தால்கூட உடனே ஜி.ஹெச்.,சில் ஆஜராகி விடுகிறார். மருத்துவர்களும் அவரை, 'செக்' செய்து, அனுப்பி வைக்கின்றனர்.
வாரத்தில் இரண்டு நாள் இப்படி கலெக்டர் வந்து விடுவதால், மருத்துவமனையை துாய்மையாக பராமரிக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தினரும், தங்கள் பிரச்னைகள், கோரிக்கைகளை கலெக்டர் காதில் போட்டு விடுகின்றனர்.
சமீபத்தில் கலெக்டர் ஜி.ஹெச்., வந்து சென்றதும், டாக்டர் ஒருவர், 'ஆய்வு செஞ்ச மாதிரியும் ஆச்சு; செக்கப் செய்த மாதிரியும் ஆச்சுன்னு, கலெக்டர் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக டாக்டர்கள் ஆமோதித்தனர்.

