PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழக மக்கள் விரும்பும், எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆட்சியை நிறுவ, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். அவிநாசி - அத்திக்கடவு திட்டம், விமான நிலைய விரிவாக்கம் என, 50 ஆண்டு கால வளர்ச்சியை கோவைக்கு தந்தவர் பழனிசாமி.
'கோவையில் உள்ள அத்தனை திட்டங்களும் ஜெ., மற்றும் பழனிசாமி கொண்டு வந்தவை. தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக எந்த திட்டமும் வரவில்லை; இது மக்களுக்கும் தெரியும். பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர்., ஆட்சி அமையும். 200 தொகுதிகளில் வென்று, பழனிசாமி மீண்டும் முதல்வராக அமர்வார்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வினரும் இதையே தான் சொல்றாங்க... ஆனா, இந்த ரெண்டு கட்சிகள் கனவுக்கும், நடிகர் விஜய் வேட்டு வச்சுட போறாரு பா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.