PUBLISHED ON : ஜூன் 08, 2026 12:00 AM

அரியலுார் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், சமீபத்தில் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ' நாம் பார்க்காத தோல்வி அல்ல. ஆனால், இந்த தேர்தலில் ஒரு மாயையை ஏற்படுத்தி, ஊடக மாயாஜாலத்தின் மூலமாக, த.வெ.க.,வினர் குறைபிரசவ வெற்றியை பெற்றுள்ளனர். அது முழு வெற்றி அல்ல; இது நீண்ட நாள் தாங்காது.
'எல்லா மக்களுக்கும் திட்டங்களை கொண்டு சேர்த்தது மட்டுமே வெற்றிக்கு உதவாது. இதுபோன்று குறுக்கு வழிகளில் வருவோரை தடுக்க வேண்டிய பணியையும் நாம் சேர்த்து செய்ய வேண்டும் என்பதை, காலம் நமக்கு கற்று தந்துள்ளது. இதையெல்லாம் தாண்டி மீண்டு வருவோம்' என்றார்.
இதில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், 'இவரை மாதிரி அமைச்சர்கள் மட்டுமே வளமா இருந்தாங்க... நம்மை மாதிரி நிர்வாகிகளுக்கு ஒண்ணும் செய்யாம விட்டதும் தோல்விக்கு காரணம்...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.
