PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வகையில்,பெண்களுக்கு ஆதரவாக சட்டங்கள் உள்ளதாகவும்,அவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரியும், இந்தியஆண்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு எத்தனை பேர் வருவர் என தெரியாததால், 10 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு நியமித்திருந்தனர். ஆனால், 12 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட போலீசார், 'நாங்களே 10 பேர் இருக்கோம்; நீங்க வெறும் 12 பேர் தான் வந்திருக்கீங்க...' என, முணுமுணுத்தனர்.
இதைக் கேட்ட அமைப்பின் நிர்வாகி ஒருவர்,'அப்படி எல்லாம் சொல்லாதீங்க...நாளைக்கே உங்க மனைவியால் உங்களுக்கு பிரச்னை வந்தாலும், போராட நாங்க தான் வரணும்...' எனக்கூற, போலீசார், 'கப்சிப்' ஆகினர்.

