/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'இவர் சொல்றதிலும் அர்த்தம் இருக்கு!'
/
'இவர் சொல்றதிலும் அர்த்தம் இருக்கு!'
PUBLISHED ON : டிச 27, 2025 03:21 AM

த.மா.கா.,வில் சமீபத்தில் இணைந்த தமிழருவி மணியன், ஈரோட்டில் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், 'நடிகர் விஜய் முன் இருப்பது, இரு வாய்ப்புகள் தான்... ஒன்று, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போல இருப்பதா அல்லது அவரது தம்பியான பவன் கல்யாண் போல இருப்பதா என்பது தான்.
'ஆந்திராவில், பிரஜா ராஜ்யம் என்ற தனி கட்சி துவக்கி தோற்று, மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்டார் சிரஞ்சீவி. ஆனால், பவன் கல்யாணோ ஜன சேனா என்ற கட்சியை துவக்கி, மிகச்சரியாக காய் நகர்த்தி, சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார்.
'நாயுடு முதல்வரானார்; இவர் துணை முதல்வரானார். தற்போது, துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண், நாளை சந்திரபாபுவை தள்ளிவிட்டு முதல்வராக முயற்சிக்கலாம்.
'தமிழகத்தில், 'நான் தனியாகத்தான் நிற்பேன்' என்ற முடிவை விஜய் எடுத்தால், அவரும் அடுத்த சிரஞ்சீவியாக மாறி விடுவார்...' என்றார்.
சீனியர் நிருபர் ஒருவர், 'இவர் சொல்றதிலும் அர்த்தம் இருக்கே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

