/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'கமல்கிட்ட கத்துக்கிட்டிருப்பாரோ?'
/
'கமல்கிட்ட கத்துக்கிட்டிருப்பாரோ?'
PUBLISHED ON : ஏப் 22, 2025 12:00 AM

சென்னை அம்பத்துாரில் நடந்த நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்; பின், செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் முதல்வர் பயந்து விட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு சேகர்பாபு பதில் அளிக்கையில், 'முதல்வரின் பயம் என்பது, சுவரில் உள்ள சுண்ணாம்பு போன்றது; தட்டினால் கீழே விழுந்து விடும். இது, பல எமர்ஜென்சிகளையும், உருட்டல், மிரட்டல்களையும் பார்த்த இயக்கம்...' என்றார். அவரது பேச்சு புரியாமல், அங்கிருந்த தி.மு.க., நிர்வாகிகள் பலரும் குழம்பி முழித்தனர்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், 'யாருக்கும் புரியாதது மாதிரி பேசுறாரே...' என கேட்க, மூத்த நிருபர், 'இப்படி பேசுறதை, இவங்க கூட்டணி கட்சித் தலைவர் கமல்கிட்ட கத்துக்கிட்டிருப்பாரோ...' என முணுமுணுத்தபடியே நடந்தார்.