/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'தனி சின்னத்தில் நிற்க முடியாது!'
/
'தனி சின்னத்தில் நிற்க முடியாது!'
PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்ட நாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாடு, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் செங்குன்றத்தில் நடந்தது.
இதில் தனபாலன் பேசுகையில், 'அடுத்தாண்டு வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம். பாரம்பரிய தற்காப்பு கலையான, சிலம்பம் விளையாட்டை பாதுகாக்க, சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க, தி.மு.க., அரசு முன்வர வேண்டும்' என்றார்.
மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், 'அ.தி.மு.க., கூட்டணியில், நம்ம கட்சிக்கு தென் மாவட்டத்தில் தான் 'சீட்' தருவாங்க...' என்றார். மற்றொரு நிர்வாகி, 'எங்க போட்டியிட்டாலும் தனி சின்னத்தில் நிற்க முடியாது; இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடணும்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

