PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் த.வெ.க.,வுக்கு வருவர் என்று நான் எப்போதும் சொன்னதில்லை; 15 பேர் வருவர் என்று தான் சொன்னேன். உலகத்தை சில தலைவர்கள் வென்று காட்டியுள்ளனர். ஆனால், காலத்தை யாராலும் வெல்ல முடியாது. காலத்தை வென்று காட்டியவர், த.வெ.க., தலைவர் விஜய் மட்டுமே.
‘அ.தி.மு.க., அண்ணன் மகராசன் பழனிசாமி எனக்கு நல்லது பண்ணி விட்டார். அவர் மட்டும் என்னை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால், அமைச்சராகி இருக்க முடியாது; நல்ல காரியம் செய்துள்ளார்’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘நல்லவேளையா தேர்தலுக்கு முன்னாடி நீக்கியதால, இவரால அமைச்சராக முடிஞ்சது... இப்ப பழனிசாமியால நீக்கப்பட்டவங்க எல்லாம், திக்கு தெரியாத காட்டுல அல்லவா நிற்கிறாங்க’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
