தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘தங்களது நலன் தான் முக்கியம்!’

‘தங்களது நலன் தான் முக்கியம்!’

‘தங்களது நலன் தான் முக்கியம்!’

3


PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி., ரவிகுமார், சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘பார்லிமென்டில் ஏற்கனவே தோற்றுப்போன தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை, மீண்டும் கொண்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.

‘மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க., தற்போது தேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை கருதியும், கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருதியும் தவறான முடிவை எடுத்தால், தமிழகத்துக்கும், தென் மாநிலங்களுக்கும், பார்லிமென்ட் ஜனநாயகத்துக்கும் பெரும் இழப்பு ஏற்படும். அதனால், அத்தகைய முடிவை தி.மு.க., எடுக்கக்கூடாது’ என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘தி.மு.க.,வினர் முதல்ல தங்களது நலனை மட்டும் தான் பார்ப்பாங்க... அப்புறம் தான் நாடு, மக்கள் எல்லாம்’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us