PUBLISHED ON : ஜூலை 25, 2026 12:28 AM

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன், சமீபத்தில் கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'முதல்வர் விஜய் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. தி.மு.க.,வினர் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேலை செய்திருந்தால், கண்டிப்பாக ஜெயித்திருக்கலாம். நான், சென்னை கொளத்துாரில் உள்ள ஒரு டாக்டரை சந்தித்தேன்.
'அப்போது அவர், கொளத்துார் தொகுதிக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனால், 4 வயது, 5 வயது சின்னப் பயலுக பேச்சை கேட்டு, மக்கள் ஓட்டு போட்டு, த.வெ.க.,வை வெற்றி பெற செய்து விட்டதாக வருத்தப்பட்டார்' என்றார்.
இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அது சரி... 75 வருஷ பாரம்பரியம் கொண்ட தி.மு.க.,வை, நாலஞ்சு வயது சின்னப் பசங்க காலி பண்ணிட்டாங்களே' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
