PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின், 75-வது ஆண்டு பவள விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற கலெக்டர் மனீஷ் நாரணவரே பேசுகையில், ‘பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றதால், என் பள்ளி பருவம் ஞாபகம் வந்துவிட்டது. தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வேன்.
‘ஐ.ஏ.எஸ்., படிப்பு முடித்து பயிற்சிக்கு வேறு மாநிலத்துக்கு அனுப்பிய போது, மொழி தெரியாமல் தடுமாறினேன்; மராத்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்ததால் சமாளிக்க முடிந்தது. வேலை வேண்டுமென்றால் மொழியறிவு நிச்சயம் தேவை’ என்றார்.
பின், ‘ஆரோக்கியமாக வாழ தினமும் ஒரு நிமிடம் மூச்சு பயிற்சி செய்யுங்கள்’ என கூறி, 1, 2, 3, 4, 5 என எண்ணி, மூச்சு பயிற்சி செய்து காண்பித்தார்.
இதை பார்த்த ஆசிரியர் ஒருவர், ‘கலெக்டரா இருந்தாலும், அடிப்படையில் தான் ஒரு எம்.பி.பி.எஸ்., டாக்டர் என்பதை நிரூபிச்சிட்டாரே’ என முணுமுணுக்க, சக ஆசிரியர்கள் ஆமோதித்தனர்.
