/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'சுற்றுலா தலமா மாத்திட்டாங்களே!'
/
'சுற்றுலா தலமா மாத்திட்டாங்களே!'
PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கு அனுமதி கேட்டு, அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் மலர்விழி தலைமையில், 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு கொடுக்க சமீபத்தில் வந்தனர்.
எஸ்.பி.,யை சந்திக்க ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி கொடுத்த நிலையில், மற்ற அனைவரும் வாசலில் காத்திருந்தனர். அப்போது, அனைவரும் எஸ்.பி., அலுவலகத்தை சுற்றிப் பார்த்து, தங்கள் மொபைல் போனில் படம் எடுத்துக் கொண்டனர். பலர் த.வெ.க., தலைவர் விஜய் பாணியில், வெள்ளை ச ட்டை, காக்கி பேன்ட் அணிந்து, 'போஸ்' கொடுத்தனர்.
இதை பார்த்த அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர், 'எஸ்.பி., அலுவலகத்தை, சுற்றுலாத் தலமா மாத்திட்டாங்களே...' என கூற, சக போலீஸ்காரர்கள் சிரித்தபடியே நகர்ந்தனர்.

