உள்ளடக்கத்திற்கு செல்ல

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ கே.ஒய்.சி., நடைமுறைகளை எளிதாக்க செபிக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்
கே.ஒய்.சி., நடைமுறைகளை எளிதாக்க செபிக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்
கே.ஒய்.சி., நடைமுறைகளை எளிதாக்க செபிக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்
UPDATED : ஏப் 27, 2026 02:12 PM
ADDED : ஏப் 26, 2026 01:40 AM

அ நிறம் | அளவு
'மு தலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் 'கே.ஒய்.சி.,' விதிமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது:
ஒட்டுமொத்த நிதி அமைப்பிலும் 'கே.ஒய்.சி.,' நடைமுறைகளை எளிமை படுத்துவதில் 'செபி' தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும்.
வங்கி, காப்பீடு மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளுக்கும் பொதுவான ஒரே 'கே.ஒய்.சி.,' என்கிற நிலை உருவாகும் போது, முதலீட்டாளர்களின் நேரம் மிச்சமாவதுடன், நிதி சேவைகளை பெறுவதும் எளிதாகும்.
அதுமட்டுமில்லாம ல், சாதாரண மக்களும் எளிதாக பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
