PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் பேச்சு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, உட்கட்சி பூசல்களை களைய வேண்டும். செங்கோட்டையன், நான் அறிந்தவரையில் மிக நல்ல மனிதர். எந்த நிலையிலும் பிரச்னையை உருவாக்கிக் கொள்ளாத மனிதர். கட்சியில் இருக்கக் கூடியவர்களில், பழனிசாமியை விட சீனியர். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவருக்கு கீழே கல்வி அமைச்சராக இருந்தார். செங்கோட்டையனை பழனிசாமி அழைத்து மனம் விட்டுப் பேச வேண்டும். இரண்டு பேரும் ஒரே கட்சிதான். இரண்டு பேருக்கும் தலைவர் எம்.ஜி.ஆர்., தான், தலைவி ஜெயலலிதா தான். இருவருக்கும் இரட்டை இலை தான்.
தனியாகக் கட்சி நடத்தினாலும், அ.தி.மு.க.,வின் அவைத்தலைவர் மாதிரியே அறிவுரை தர்றாரே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: கச்சத்தீவை, 1974ல் தாரை வார்த்து கொடுக்கும்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி மவுனமாக இருந்தார். 'கச்சத்தீவை மீட்போம்' என தேர்தல் அறிக்கையில் கூறி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், முதல்வர் ஸ்டாலின் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
'நீட்' தேர்வை நீக்குவோம், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூடத்தான் வாக்குறுதி தந்தாங்க... அதெல்லாம் நிறைவேறிடுச்சா என்ன?
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பேட்டி: 'இண்டியா' கூட்டணி மற்றும் சில கட்சிகளின் ஓட்டு வங்கி குறைந்து விடும் என்ற பயத்தில், வக்ப் சட்டத்திருத்த மசோதா பற்றிய பொய்களை பரப்பி, முஸ்லிம்களை தவறாக வழி நடத்துகின்றனர். ஓட்டு வங்கி அரசியலுக்காக, முஸ்லிம்களுக்காக போராடுவது போல் நடித்து, இந்தியாவின் பிற குடிமக்களின் உரிமைகளை மிதித்துச் செல்கின்றனர் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.
இதை எல்லாம் தமிழக மக்கள் உணர்ந்திருந்தால், தமிழகத்தில் தாமரை எப்பவோ மலர்ந்திருக்குமே
கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த் அறிக்கை: எளிதில் கடன் பெற சாமானிய மக்களுக்கு மிகவும் உதவி வருவது தங்க நகைக்கடன். அவசரத் தேவைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கிகளில் பெற்ற தங்க நகைக்கடன் தொகைக்கு, ஆண்டுதோறும் வட்டி செலுத்தி, மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது அசலுடன், வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதால், ஏழை
மக்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இந்த புதிய விதியை திருத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு இந்த மாதிரி குதர்க்கமான ஆலோசனைகளை யார் தர்றாங்கன்னு தான் தெரியலை!
*************************

