PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு:
ஆசிரியர்கள்
வழிகாட்டுதலை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். கல்வியைத் தாண்டி மற்ற
விஷயங்களை இளைஞர்கள் யோசிக்கக் கூடாது. உயர்கல்வி படிப்பதற்கு
முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அது
சரி... பள்ளிக்கு போற வழியெல்லாம், டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து
வச்சிட்டு, யோசிக்காம இருங்கன்னு சொன்னா கேட்பாங்களா?
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர், கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை:
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதை தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும், 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியது, பா.ஜ., அரசு. தமிழக மக்களிடம் கையேந்தி, 1,001 ரூபாயாக ரயில்வே அமைச்சருக்கு திருப்பி அனுப்பி வருகிறது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.,வின் அணுகுமுறைக்கு இதுசரியான சம்மட்டி அடி.
ஏன், 1,001 ரூபாய்க்கு மக்களிடம் கையேந்தணும்... காங்கிரஸ்காரர்களிடம் அந்த தொகை கூட இல்லையா?
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூ., செயலர், கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:
சென்னை மாநகருக்குள் மக்கள் பிரச்னைகளில், ஜனநாயக ரீதியில்ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி வழங்குவதில்லை. மாறாக,மக்களுக்கு சம்பந்தமேஇல்லாத இடத்தை ஒதுக்கி, ஆர்ப்பாட்டத்தை நடத்த நிர்ப்பந்திக்கின்றனர். அமைதியாக, ஜனநாயக ரீதியாக, எங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டு, சீர்குலைக்கும்நோக்கோடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கை யில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் போலீஸ் அதிகாரி மீதுதுறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு எதிரா போராட்டம் நடத்தி, அந்த அதிகாரிக்கு, 'மெமோ' வாங்கிக் கொடுத்துட போறீங்கன்னு தடுத்திருப்பாரு!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படும் ஊதியத்தை போலவே, நாடு முழுதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம்அறிவுறுத்தி உள்ளது; வரவேற்புக்குரியது. இதை அமல்படுத்தும் வகையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக,தமிழக அரசு மருத்துவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அரசாணை, 354ஐ செயல்படுத்த மனமில்லாத ஆட்சியாளர்கள், ஆணையத்தின் அறிவுறுத்தலை பேச்சு, பேட்டி, அறிக்கை கண்டுக்கவே மாட்டாங்க!