sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி பேட்டி: வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சி துவங்கியவர் வைகோ. தற்போது, ம,தி.மு.க., குடும்ப கட்சியாகி விட்டது. கட்சியின் பெயர் அறிவித்த நாளான மே 6ம் தேதியை ஆண்டு விழாவாக கொண்டாடி வருகின்றனர். எந்த நோக்கத்துக்கு கட்சி துவங்கப்பட்டது என்பதை மறந்து விட்டனர். குடும்ப கட்சியாக மாறி போன ம.தி.மு.க.,வில் ஆண்டு விழா கொண்டாடுவது தேவையற்றது.

விடுங்க... இப்படி ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு விழா நடத்துனா தான் அந்த கட்சி இருக்கிறதே தெரியும்!

தமிழக பா.ஜ., துணை தலைவர்நாராயணன் திருப்பதி அறிக்கை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்து கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதோடு, தமிழக அரசியல் படுபயங்கரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையையும் அளிக்கிறது. இந்த மரணத்திற்கு பணம், பதவி, அரசுப்பணி ஒப்பந்தம் தான் காரணம் என நீள்வதே, அரசியல் சூதாட்டம் தமிழகத்தில் தங்கு தடையின்றி நடப்பதை உணர்த்துகிறது.

முதலில் அது கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு போலீஸ் வரல... அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: இளைஞர் நலத்தை தன் வசம் வைத்திருக்கும் அமைச்சர் உதயநிதி, சமூக நலத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து, நகரம் முதல் கிராமங்கள் வரை, இளைஞர் அமைப்புகளை உருவாக்கி, அதன் வழியே மது மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆட்பட்டிருப்போரை கண்டறிந்து, அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.இது தான் மதுவை தமிழகத்துக்கு அறிமுகம் செய்த தி.மு.க.,வின் பாவ விமோச்சனமாகும்.

ஏதோ ஐடியா கொடுக்கிற மாதிரி இப்படி குத்திக்காட்டி பேசினால், இவரது கோரிக்கை ஏற்கப்படாது!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்உதயகுமார் பேச்சு: தமிழகத்தில், 17 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 150 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அதை சமாளிக்க முடியாத அளவுக்கு,கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. நீர்த்தேக்கங்களில் இதுபோன்ற காலங்களில், 23 சதவீதம் இருக்க வேண்டிய நீர் இருப்பு, 17 சதவீதம் மட்டும் இருப்பதால், மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.நீர் மேலாண்மையில் தி.மு.க., அரசு பூஜ்ஜியம்.

வெள்ளம் வந்தாலும், வெயில் அடித்தாலும், 'வார்டன்னா அடிப்போம்'கிற மாதிரி, எதிர்க் கட்சினா ஆளுங்கட்சியை குறை சொல்லணுமா?






      Dinamalar
      Follow us