sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: நதிநீர் பங்கீட்டில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையாக இருந்தாலும், காவிரி விவகாரமாக இருந்தாலும் மத்திய அரசு தலையிட்டு, நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்ப்பாயம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்திற்கு பிரச்னையை கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசுக்கும் உரிய அழுத்தம் தர வேண்டும்.

எம்.பி., சீட் மறுக்கப்பட்ட பின் தான் அரசர் ஆக்டிவா செயல்படுறார் போலிருக்கே!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தொழில் நிறுவனங்களை நலிவில் இருந்து மீட்போம் என வாக்குறுதி அளித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. தற்போது தொழில் நிறுவனங்களை நசுக்கும் பணியை செய்கிறது. மின் கட்டணம், நிலை கட்டணம், உச்சநேர மின் கட்டணம், கூரை சூரிய சக்திக்கான மின் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது நிறுவனங்கள் சந்தையில் வாங்கும் மின்சாரம், யூனிட்டிற்கு 34 பைசா மேல் வரி விதிக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

'சொல்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து வருகிறோம்'னு அடிக்கடி முதல்வர் சொல்றாரே... அதுக்கு அர்த்தம் இப்ப புரிஞ்சதா?

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பார்' என, மோடி கூறியதற்கு, 'ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் என்ன தவறு. நிர்வாகம் சரியாக நடந்தால் போதும்' என, திருமாவளவன் பேசி உள்ளார். சமூக நீதி பேசும் தமிழகத்தில், ஆண்டுக்கு ஒரு முதல்வர் திட்டத்தை செயல்படுத்தி, ஆட்சி நிர்வாகத்தில், அதிகார பகிர்வு கொடுத்து இந்தியாவுக்கு வழிகாட்ட சொல்லி, முதல்வர் ஸ்டாலினை இவர் வலியுறுத்தலாமே!

அப்படி ஒரு நிலை தமிழகத்தில் வரணும்னு தான் திருமா உள்ளிட்டோர் ஆசைப்படுறாங்க!

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: முதல்வரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியது தவறு தான் என்று சொன்ன நீதிபதி, பிரதமரை அவன், இவன் என்று பேசிய பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுப்பாரா? திருமாவளவன் பிரதமரை அவன், இவன் என்று பேசியதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தது சரி என, முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? ஒருமையில் யாரையும் பேச உரிமையில்லை. சவுக்கு சங்கரை கைது செய்த காவல் துறை, பிரகாஷ்ராஜை கைது செய்யுமா?

மோடி 3.0 அரசு அமைந்தால் இதுக்கெல்லாம் பாடம் கற்றுக் கொடுத்துட மாட்டீங்க?






      Dinamalar
      Follow us