sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக, அங்கு, இங்கு என இல்லாமல், எங்கும் செய்தி ஒலிக்கிறது. அதுகுறித்து முதல்வர் முடிவெடுப்பார். உதயநிதி முறையாக கட்சியில் வளர்ந்தவர். கட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர். என் தனிப்பட்ட மரியாதையை விட, கட்சி நோக்கம், பலம், அதையெல்லாம் நான் எதிர்பார்ப்பவன். கட்சி வளர்ச்சிக்காகவே என்னை அர்ப்பணித்தவன். என் வளர்ச்சி, என் குடும்ப நிகழ்ச்சிகளை விட, கட்சியை பெரிதாக நினைப்பவன் நான்.

தன்னை போலவே, முதல்வரும் கட்சியை பெரிதாக நினைத்து, அனுபவமில்லாத உதயநிதிக்கு பதிலா அனுபவசாலியான தனக்கு துணை முதல்வர் பதவி தரணும்னு கேட்கிறாரோ?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகம் பெரும்பாலான இடங்களில் பெயர் பலகையில் தான் இயங்கி வருகிறது. குடும்ப கம்பெனியின் தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிக்கும் என்பதற்காக, அம்மா குடிநீரை நிறுத்தியது நியாயமா? மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா சிமென்ட், அம்மா மருந்தகம் என, பல நலத்திட்டங்களை முடக்கி, பொய் வேடம் போடும் முதல்வரின் நடிப்பிற்கு, இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது நிச்சயம்.

'அம்மா' உணவகங்களுக்கு, 'கலைஞர்' உணவகம்னு பெயரை மாற்றாம இருக்காங்களேன்னு சந்தோஷப்படுங்க!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் வெற்றி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி உட்பட, 10 தேர்தல் வெற்றிக்காக, பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை தி.மு.க., நடத்த வேண்டும்.

அதைவிட, அ.தி.மு.க.,வை உடைத்து, இரட்டை இலைக்கு எதிராகவே கம்பு சுத்தும் இவங்க தலைவர் பன்னீர்செல்வத்துக்கு விழா எடுப்பது தான் பொருத்தமா இருக்கும்!

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் நடக்கும் சம்பவங்கள், சென்னை மாநகரம் ரவுடிகளின் ராஜ்ஜி யத்தில் எவ்வாறு இருந்து வந்தது என்பதை தெளிவாக்குகிறது. அரசியலை கேடய மாக பயன்படுத்தி, சமூகவிரோத தீய சக்திகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களை ஊக்குவிப்பது அரசியல்வாதிகள் தான். இந்நிலை மாற வேண்டும்.

தெலுங்கு படங்கள்ல வர்ற கொடூர வில்லன்கள் எல்லாம், தமிழக அரசியல் கட்சிகள்ல அடைக்கலம் புகுந்துட்ட மாதிரி தோணுது!






      Dinamalar
      Follow us