PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: மத்திய இணை அமைச்சர் சுரேஷ்
கோபி, முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை அறிய எந்த
கமிஷனும்அமைக்கவில்லை. வயநாடு நிலச்சரிவால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். 'புதிய அணை வேண்டும். ஆனால்,
முல்லை பெரியாறு அணை பலமாகவே உள்ளது' என, கேரள முதல்வர் பினராயி விஜயன்
தெரிவித்துஉள்ளார்.
இவரது பேச்சை பார்த்தால், 'பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' பழமொழி தான்நினைவுக்கு வருது!
தமிழக காங்., பொதுச் செயலர் கே.ஜி.ரமேஷ்குமார்அறிக்கை: 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., லோக்சபா தேர்தலில், பாசிச பா.ஜ., என மேடைதோறும் முழங்கி, மக்கள் மன்றத்தில் ஓட்டு வாங்கி விட்டு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து நாணயம் வெளியிடுகிறது. அண்ணாமலைக்கு,முதல்வர் ஸ்டாலின்தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கிறார்என்றால், தி.மு.க.,யாருடன் கூட்டணியில் இருக்கிறது? கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால், தி.மு.க.,வின் நாணயம் இதன் வாயிலாக கேள்விக்குள்ளாகியுள்ளது.
போச்சுடா... இப்ப தான், செல்வப்பெருந்தகை முதல்வரை பார்த்து, உறவை ஒட்டிட்டு வந்தாரு... இவர் கிழிச்சு தோரணம் கட்டிடுவார் போலிருக்கே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் கடைசியாக, 2022 அக்டோபரில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின், மூன்று ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள்,ஆசிரியர் பணிக்கான கல்வி தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாததால், தனியார் பள்ளிகளில் கூட, அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை. தமிழக அரசு அலட்சியம் காட்டாமல், உடனே ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்.
தகுதி தேர்வு நடத்தினாலும்,அவங்களுக்கு வேலை வழங்க அரசு கஜானாவில் பணமில்லையே!
பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் பேச்சு: கருணாநிதிக்குவரலாறு எதுவும் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு நல்லது செய்தார்;தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டால் பெயர் கிடைக்கும் என, தி.மு.க., அழைத்து உள்ளது.
ராஜ்நாத் சிங்கும், பிரதமர் மோடியும், 'நாட்டுக்கே வழிகாட்டி கருணாநிதி'ன்னு புகழ்ந்து தள்ளியிருக்காங்க... அவங்க கருத்து எல்லாம் பொய்னு சொல்ல வர்றாரா?

