sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ம.க., மாநில பொருளாளரும், பெண் கவிஞருமான திலகபாமா அறிக்கை: தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்கள் உள்ள மாவட்டங்களில் கூட இலக்கு வைத்துடாஸ்மாக் கடைகள் நடத்தப்படுகின்றன. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடந்த போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அங்கு, தனியார் மதுபான விடுதிகளின் அத்துமீறல்கள், அநாகரிக செயல்கள் அரங்கேறியதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசா?

திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு முருகன் இப்ப தான் முக்கியம்... ஆனால், அரசு நடக்க டாஸ்மாக் எப்பவுமே முக்கியம்னு இவங்களுக்கு தெரியாதா?

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: 'தமிழகத்தில் 28 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் செப்., 1ம் தேதியிலிருந்து உயர்த்தப்படும்' என, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூனில் ஒரு முறையும், செப்டம்பரில் ஒரு முறையும் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை இரண்டாக பிரித்து, கட்டணங் களை உயர்த்தி வருகிறது. இது சாலை வழியாக பயணம் செய்வோர் மீது நடத்தப்படும் சட்டபூர்வ பகல் கொள்ளை.

தமிழக அரசு இஷ்டத்துக்கு வரிகளையும், கட்டணத்தையும்உயர்த்திய போது மவுனமா தானே இருந்தீங்க... இப்பமட்டும் என்னாச்சு?

முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழகத்தில் செப்., 1 முதல், 17 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணத்தை உயர்த்த உள்ளனர்; இது அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். ஆம்னி பஸ்கள் கட்டணம் உயரக்கூடும். தமிழகத்தில் சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்கச்சாவடிகளை அகற்றுவது இருக்கட்டும்... முதலில்கட்டணத்தை வருஷா வருஷம் ஏத்தாம இருக்க சொல்லுங்க!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி: அண்ணாமலை ஐ.பி.எஸ்., பதவியில் இருந்துள்ளாரே தவிர, அரசியலில் அவர் இன்னும்எல்.கே.ஜி.,யை தாண்டவில்லை. அண்ணாமலைஅரசியல் நாகரிகம் கற்றுக் கொண்டு பேச வேண்டும். எதிர்க்கட்சி தலைவரை இழிவாக பேசுவதுஅண்ணாமலைக்கு அழகா; தேசிய பதவியில் இருக்கும் அண்ணாமலைக்கு அழகு கிடையாது.

ஐ.பி.எஸ்., ஆகுறது கூடஈசி; அரசியல் படிப்பது தான்கஷ்டம்னு சொல்றாரா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us