PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

புதுக்கோட்டை தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., முத்துராஜா பேட்டி:
தமிழக
முதல்வர் ஆலோசனைப்படி, புதுக்கோட்டை சட்டசபை தொகுதியில், 'இல்லம் தேடி
எம்.எல்.ஏ.,' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களை அவர்கள்
இல்லத்திற்கே சென்று சந்தித்து, குறைகளை கேட்டு வருகிறேன். அவர்களிடம்
கோரிக்கை மனுக்களை பெற்று, தீர்வு காணப்பட்டு வருகிறது.
இவர்
மாவட்டத்துல ரெண்டு அமைச்சர்கள் இருக்கிறப்ப அடக்கி வாசிக்காம, இப்படி
விளம்பரம் தேடுனா, 2026 தேர்தலில் இவருக்கு சீட் கிடைக்குமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், கூட்டுறவுத் துறை சார்பில், 'அம்மா மருந்தகம்' நடத்தப்பட்டது கூட தெரியாமல், 'அம்மா கிளினிக்'கை தான் அம்மா மருந்தகம் என, அ.தி.மு.க.,வினர் புரியாமல் பேசுகின்றனர் என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருப்பது நகைப்புக்குரியது.
அம்மா கிளினிக்கை ஞாபகம் வச்சிருக்காரேன்னு சந்தோஷப்படாம, அவரை கேலி பேசுறீங்களே!
தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ்அறிக்கை: ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே நாடு; ஒரே ரேஷன், சாகர் மாலா, முத்தலாக் சட்டம், 'நீட்' தேர்வு, விஸ்வகர்மா திட்டம், நவோதயா பள்ளிகள் மற்றும்குற்றவியல் நடைமுறை சட்டங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தை தனித்து பிரிக்கும்; பின்நோக்கி நகர்த்தும்.
அது சரி... மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் ஏத்துக்கணும்னா, எல்லா மாநிலத்துலயும் பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கணும்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுடன், முதல்வர்அமெரிக்கா சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது வியப்பாக உள்ளது. அங்கு இறங்கிய மறுநாளே முதலீடுகள் குவிந்ததாக செய்தி வெளியிடுவது, 'மக்கள் முட்டாள்கள்' என்ற எண்ணத்தை, திராவிட மாடல் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. ஒரு நிறுவனம் தன் தொழிலை கட்டமைக்க, பல கோடிகள் செலவு செய்த இடத்தில் தான், அதை விரிவாக்கம் செய்ய முயற்சிக்கும் என்பதுசாதாரண பொது அறிவு. அந்தபொது அறிவு தமிழர்களிடம் இல்லை என, நினைப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு, இவரது கட்சி தலைமை வகிக்கும் மத்திய அரசு தான் அனுமதி தந்திருக்கு என்பதை மறந்துட்டாரோ?