PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்தமுன்னாள் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி பேட்டி:
சென்னை
பார்முலா கார் ரேஸ் மிகப்பெரியசுற்றுலா வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
உதயநிதிக்கு துணை முதல்வராகும் திறமை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், சிறப்பாக செயல்படுகிறார்.
சட்டசபை, லோக்சபா தேர்தலில் தமிழக அரசியலில் தன் நிலைப்பாடுகளை
வெளிப்படுத்தியுள்ளார். தகுதியும், திறமையும் இருக்கும் போது, தவறு எப்படி
நடக்க முடியும்?
இவர் உதயநிதிக்கு திடீரென கொடி பிடிக்கிறதை பார்த்தால், 2026ல் மீண்டும் எம்.எல்.ஏ., ஆக ஆசைப்படுறாரோ?
தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'கேரள காங்கிரஸ்முக்கிய தலைவர்கள் பலர், பெண்களுக்கு பாலியல்தொல்லை கொடுத்து வந்தனர்' என்ற குற்றச்சாட்டை கேரள மாநில காங்., பெண் தலைவர் சிமிரோஸ்பெல் ஜான் தெரிவித்துள்ளார்.ஆனால், அதிகமாக, 'ரேப் கேஸ்' புகார்கள் யார் மீது வருகிறது என்பதில் காங்கிரஸ்கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடும் போட்டி உருவாகியுள்ளது. அடுத்த தேர்தலில், இந்த இரு கட்சிகளுக்கும் ஒரு எம்.எல்.ஏ., கூட கிடைக்காமல் இருக்க மக்கள் தீர்ப்பு வழங்குவர்.
அப்படின்னா, கேரளாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்துடும்னு சொல்றாரா... நடக்குதான்னு பார்க்கலாம்!
இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் தமிழரசன் பேட்டி: அரசு பள்ளிகளின் நிர்வாக சீர்கேட்டால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவதில் காட்டும்ஆர்வத்தை, கல்வி வளர்ச்சிக்கு காட்டுவதில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆதி திராவிடர் நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கே... அதுக்குள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவாங்க!
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, முன்னாள் செய்தி தொடர்பாளர்கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: நடிகர் விஜய், அரசியல் கட்சி தலைவர்களால் உன்னிப்பாககவனிக்கப்படுகிறார்; பொதுமக்களால் விரும்பி ஏற்கப்படுகிறார்; அதனால் தான் சிலருக்கு விஜயை பிடிக்கவில்லை. அவரை கிண்டல், ஏகடியம் செய்கின்றனர். தன்னை பற்றி விமர்சிக்கிறவர்களுக்கு, விஜய் நிரூபிக்க வேண்டியது, தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையை மட்டும் தான்.
விஜய் கட்சியில் இணைவோர் பட்டியலில் இவரும் இருப்பார் போல தெரியுதே!