தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு பேட்டி அறிக்கை

பேச்சு பேட்டி அறிக்கை

பேச்சு பேட்டி அறிக்கை

2


PUBLISHED ON : செப் 24, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2026 01:57 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேச்சு: கடலுார் மாவட்டத்தில், 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் நெல் மூட்டைகள், தார்ப்பாய் மூடப்படாததால் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. த.வெ.க., அரசின் அலட்சியத்தால் நெல் வீணாவதோடு, ரேஷன் கடைகளுக்குப் புழுத்துப் போன அரிசி அனுப்பப்படும் அபாயமும் உள்ளது. சுட்டிக்காட்டும் குறைகளைச் சரிசெய்யாமல் திசைதிருப்பும் போக்கை விடுத்து, நெல் மணிகளைப் பாதுகாக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி

நெல் கொள்முதல் முறையை முழுமையாக ஒழித்து, மாநிலம் முழுக்க நவீன மூடிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்குறது தான் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்!

வி.சி.க., தலைவர் திருமா வளவன் பேட்டி: போக்குவரத்து கழக தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும், அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான மயி லாடுதுறையில், புதிய எண் ணெய் கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கக் கூடாது.

தொழிலாளர்களின் உரிமையும், விவசாயிகளின் நிலமும் காக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மத்திய - மாநில அரசுகள் இதை பரிசீலிக்கும்னு நம்புவோம்!

இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் அறிக்கை: கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் அரசின் பக்கம் நிற்காமல், உழைக்கும் மக்களின் பக்கமே நிற்பவர்கள். அரசின் தவறுகளை விமர்சித்துச் சரியானதை ஆதரிப்போம். அரசின் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் பொறுப்பாக முடியாது. ஜனநாயகப் பண்புகளுக்காகவே த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்.

ஆட்சியை தாங்கி பிடிக்கிறீங்க, ஆனா, ஆட்சி மேல வர்ற பழி உங்க மேல வரக்கூடாதா... இந்த, 'நோ -ரிஸ்க்' கம்யூனிசம் ரொம் ப புதுசா இருக்கே!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான ரோஜா பேட்டி:

நடிகர் விஜய் அதிர்ஷ்டத்தால் முதல்வரானவர். மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ளாமல், போதிய களப்பணியோ, உழைப்போ இன்றி, அவர் பதவிக்கு வந்துள்ளார். சினிமா காட்சிகளை பார்த்து, நிஜத்திலும் விஜய் அவ்வாறு செயல்படுவார் என்ற கற்பனையிலேயே, மக்கள் அவருக்கு ஓட்டு போட்டுள்ளனர். சினிமாவுக்கும், அரசியலுக்கும் இடையிலான வேறுபாடு, விஜயின் ஐந்தாண்டு ஆட்சி முடியும் போதுதான் மக்களுக்கு புரியும்.

ஆட்சிக்கு எப்படி வந்தார் என்பதை விட, ஆட்சியில் அவர் என்ன செய்கிறார் என்பதை தான் மக்கள் கணக்கு போடுவாங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us