தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்க்.கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் அறிக்கை:

ஊழலுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி அரசியல் செய்து வருகின்றனர். ஊழல் செய்தவர்கள் மீது, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க தாங்கள் ஆதரவளிப்போம். ஆனால், கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்கு அனுமதி வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச வேண்டும். ஊழலுக்கு எதிரான அரசியல் உண்மை என்றால், இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டு பின்னணி கொண்ட கட்சிகளோடு கூட்டணி வச்சுக்கிட்டே, 'நாங்க ஊழலுக்கு எதிரா நெஞ்சை நிமிர்த்தி அரசியல் பண்றோம்'னு சொல்றதுல தான், கம்யூனிஸ்டுகளின் ஆகப்பெரிய சாணக்கியத்தனமே இருக்கு!

த.வெ.க.,வை சேர்ந்த, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி:


தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், லண்டன் பயணத்தில் பங்கேற்கவில்லை. இது குறித்து முதல்வரிடமும் அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே அவர் இரண்டு வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்றுள்ளார். லண்டன் பயணத்தில் தொழில்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் வராததை வைத்து எதிர்க்கட்சிகள் போலி பிரசாரம் செய்கின்றன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங் களை போலி பிரசாரம் என்று கடந்து செல்லாமல், வெளிநாட்டுப் பயணங்களால் ஈர்க்கப்பட்ட உண்மையான முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டால், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு:


நடிப்பு என் தொழில்; போராட்டம் என் வாழ்க்கை. சிரமத்தில் இருக்கும் சக மனிதர்களுக்கு உதவுவது என் இயல்பு. முன்னோர்களின் தியாகத்தால் தான் நாம் சுகமாக வாழ்கிறோம். கல்லுாரிகள் நம் வாழ்க்கையை செதுக்குகின்றன. மக்களுக்காக பணியாற்ற வேண்டிய அரசியல்வாதிகள் அரசியல் செய்யும் நிலை மாற, மக்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.

பதவிக்கோ, தேர்தல் சீட்டுக்கோ ஆசைப்படாமல், மனசாட்சிக்கு பயந்து, சமூகத்திற்காக குரல் கொடுக்கும் மனிதர்கள் அரசியலுக்கு வருவதே உண்மையான மாற்றம்!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு:


குறுவை சாகுபடிக்கு, உரிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது சம்பா சாகுபடிக்காக கடந்த 1-ம் தேதி அணை திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து 4,000 கன அடியாக குறைந்து, நீர்மட்டமும் 40 அடியை நோக்கி சரிந்து வருகிறது. இதனால் கடைமடை பகுதிகளுக்கும், பயிரின் பூப்பு நேரத்துக்கும் தண்ணீர் கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடி செய்ய வேண்டாம் என, வேளாண் வல்லுநர்கள் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் முழு பயிர்க்கடன் தள்ளுபடியை, த.வெ.க., அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

பு திய அரசை விமர்சிப்பதோடு நிறுத்தாமல், சாகுபடியைக் காப்பாற்ற மாற்று நீர்ப்பாசன திட்டங்களுக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் சொல்றது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு அழகு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us