தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 22, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வைச் சேர்ந்த, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி அறிக்கை:


தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்க வக்கற்ற த.வெ.க., அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டு போராடும் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்கி கைது செய்கிறது. மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடியவர்கள், தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கையில் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு போராடியவர்களும் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை ஒடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குகிறது திறனற்ற த.வெ.க., அரசு.

தி.மு.க., ஆட்சியில் போராடியவங்களை, போலீசாரை விட்டு கைது செஞ்சதே இல்லைங்கிற மாதிரி பேசுறீங்களே!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி:


மின்சார தட்டுப்பாட்டை போக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக குறைந்ததால், இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும் இதை போக்க, மின்சாரத்தை கொள்முதல் செய்து, தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம். வெளியில் இருந்து மின்சாரம் வாங்கி வினியோகம் செய்தாலும், எக்காரணம் கொண்டும் மின் கட்டணம் உயராது.

'கடந்த தி.மு.க., ஆட்சி தான், இன்றைய மின்சார பற்றாக்குறைக்கு காரணம்'னு அரசியல் செய்யாம, உண்மையை பேசும் உங்களை பாராட்டலாம்!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேச்சு:


அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி, தற்போதைய ஆட்சியாளர்கள் பெருமை தேடுகின்றனர். ஏழை பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட, 'தாலிக்கு தங்கம்' திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு தங்கம் வழங்குவதில் தவறில்லை. ஆனால், த.வெ.க., அரசு 1 ரூபாய் செலவு செய்துவிட்டு, 1 லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறது; த.வெ.க.,வின் மூலதனமே 'ரீல்ஸ்' தான்.

உங்களுக்கு பிறகு வந்த தி.மு.க., அரசு, தாலிக்கு தங்கம் திட்டத்தையே ரத்து பண்ணிடுச்சே... இவங்களாவது பெயரை மாற்றி, திட்டத்தை செயல்படுத்துறாங்களேன்னு சந்தோஷப்படுங்க!

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:


பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையும், டில்லி பல்கலைக்கழகத்தில் மூன்று முக்கிய பதவிகளில், பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., வெற்றி பெற்றுள்ளது. தேச ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு இது பாடம். நவீன உத்திகள் மூலம் இளைஞர்களை யார் ஈர்க்க முயன்றாலும், தேசியமும், தெய்வீகமுமே வெல்லும்.

உங்க கட்சிக்கு மற்ற மாநிலங்கள்ல கிடைச்ச வெற்றியை கொண்டாடும் நீங்க, தமிழகத்தில் உங்க தலைமையில் செயல்படும் பா.ஜ.,வுக்கு எப்ப வெற்றியை தேடி தரப் போறீங்க?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us