sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா பேட்டி:

சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக எதையும் செய்வார். ஜெகனை அரசியல் ரீதியாக பூஜ்யமாக்கவே அவர் லட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். அவருக்கு பக்தியும் இல்லை; கடவுள் நம்பிக்கையும் இல்லை. கடவுளை தன் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார். லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

லட்டு விவகாரத்துல தவறு செய்தவர்கள் சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்னு எங்க தப்பிச்சாலும்,

ஏழுமலையானிடம் இருந்து தப்பிக்கவே முடியாது!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை தொழில்நுட்ப உதவியாளர்கள்அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வேலை நீடிக்கும் என்ற நம்பிக்கையில் பலர் திருமணம் செய்து குடும்பத்தை உருவாக்கிக் கொண்டனர்.அவர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையா, இந்த அரசை நம்பி அவங்க நடுத்தெருவுல நிற்கிறாங்க பாவம்!



முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண வேண்டியது அவசியம். உடனடியாக இலங்கை அதிபருடன் பேச்சு நடத்தி, இதற்குநிரந்தர தீர்வு காண வேண்டும். மத்திய அரசு, தமிழக மீனவர்களுக்கு, இந்திய கடற்படை வழியே, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு தேவையான அழுத்தத்தை, தி.மு.க., அரசு அளிக்க வேண்டும்.

பா.ஜ., கூட்டணியில் இருக்கிற இவர், மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தா ஆகாதாமா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில், தி.மு.க., ஊழலுக்கு எதிரானகட்சி என்ற மாயை அகற்றப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது, அவர் சிறையில் இருந்த நாட்களை பெரிய சாதனையாக கூறுகின்றனர்.

மாற்று கட்சியில் இருந்து ஊழல் செய்தவர்கள், தி.மு.க.,வுக்கு வந்துட்டா, புனிதமாகிடுவாங்க என்பது இவருக்கு தெரியாதா?






      Dinamalar
      Follow us