sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் பேச்சு: தி.மு.க., நடத்திய, 'பார்முலா 1' பந்தயத்தில் சீறிய கார்களை விட, அதிகமான எங்கள் கட்சியின் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்; தே.மு.தி.க., எதிர்க்கட்சியாகும். யார் எந்த பதவிக்கும் வரட்டும்; எந்த கட்சியும் ஆரம்பிக்கட்டும். இன்றைக்கும், 'நீ பொட்டு வச்ச தங்க குடம்...' விஜயகாந்த் பாட்டுதான், 'ஹிட்!'

அப்ப, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இவர், பிரசாரத்துக்கு போன இடத்துல அந்த பாடலை ஒலிபரப்பாம விட்டுட்டாங்களோ?

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: காவிரி டெல்டா பகுதியில் பெய்து வரும் மழையால், நிர்ணயிக்கப்பட்ட, 17 சதவீதத்திற்கும் அதிகமாக ஈரப்பதம் இருப்பதாக கூறி, அறுவடை செய்த நெல்லை கொள்முதல்செய்ய மறுப்பதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நெல்லின் ஈரப்பத அளவை, 20 சதவீதமாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறுவடை வரைக்கும் நெற்பயிரை வளர்க்க விவசாயிகள் படும் கஷ்டத்தை விட, அதை விற்க படுற கஷ்டம் தான் அதிகமா இருக்கும் போல!



தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: செஞ்சி கோட்டை என்றால், அனைவரின் நினைவுக்கு வருபவர் ராஜா தேசிங்கு. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பம் கட்ட மறுத்து, போராடி உயிர் தியாகம் செய்தவர்; சுய மரியாதையின் மறு உருவமாக விளங்கினார். இவரது மனைவி ராணிபாய், கணவரின் உடலுடன் உடன்கட்டை ஏறியதன் காரணமாகவே, ராணிப்பேட்டை நகரம் உருவானது. ராஜா தேசிங்கின் விடுதலை உணர்வை நினைவுகூரும்வகையில், அவருக்கு செஞ்சியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

பொதுப்பணித் துறை அமைச்சரா, துணை முதல்வரா இவர் இருந்தப்ப, ராஜா தேசிங்கு நினைப்பு வரலையோ?

தமிழக காங்., பொதுச்செயலர்கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை: இலங்கை கடற்படை, தமிழகமீனவர்களிடம் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகிறது. இந்தாண்டில்மட்டும் இதுவரை, 350க்கும்அதிகமான மீனவர்கள்இலங்கை கடற்படையால்கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், மீனவர் பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு சிறு துரும்பை கூட நகர்த்தவில்லை.

முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதுற மாதிரி, மத்திய அரசும் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதிட்டுதான் இருக்கு!






      Dinamalar
      Follow us