sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

'ஓட்டா, நோட்டா; எது வேண்டும் என, தி.மு.க., முடிவு செய்ய வேண்டும்' என, கேட்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், சி.ஐ.டி.யு., தலைவருமான சவுந்தரராஜன். 'சாம்சங் நிறுவனத்திடம் பணம் பெறுகிறது, தி.மு.க.,' என, நேரடியாக அவர் குற்றம் சாட்டுகிறார். இதைவிட கேவலம், தி.மு.க.,விற்கு ஏதும் உள்ளதா?

சாம்சங் விவகாரத்துல, தி.மு.க.,வை எதிர்க்கும் சவுந்தரராஜன், அரசு ஊழியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து எத்தனை போராட்டம் நடத்தினார்?

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர், எல்.முருகன் பேட்டி:

ரயில் விபத்து சம்பவத்தில் ராகுல் அரசியல் செய்யக்கூடாது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கவரைப்பேட்டை ரயில் விபத்தை ராகுல் விமர்சனம் செய்வது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, இப்போது ரயில் விபத்து வெகுவாகக் குறைந்துள்ளது. ரயில்வே துறையினர் சிறப்பாகவும், வேகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

ராகுலையே எதிர்க்கட்சி தலைவரா ஏத்துக்க மாட்டேங்குறீங்க... இன்னும் அவர் அமைதியா இருக்கணும்னா எப்படி?

தமிழக, பா.ஜ., பொதுச்செயலர், ஏ.பி.முருகானந்தம் அறிக்கை:

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என, காங்., மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை ஏற்க மக்கள் தயாராக இல்லை. அதனால்தான், ஹரியானாவில் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. காங்கிரஸ், ஓட்டை படகு; அதில் ஏறியவர்கள் சகாப்தம் முடிந்து விடும். ராகுல், பஞ்சரான டயர்; அதுவும், 'மேட் இன் இத்தாலி' என்பதை ஜெய்ராம் ரமேஷ் புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

காங்., கட்சியின் நிலையை புரிஞ்சி பல மூத்த தலைவர்கள் எப்பவோ, 'எஸ்கேப்' ஆகிட்டாங்க... இவரை மாதிரி ஒரு சிலர் அங்கு இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா?

எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான் பேச்சு:



எதிரிகளின் வசைமாரி களை பற்றி கவலைப்படாமல், 'திராவிட மாடல்' அரசு பல நல்ல காரியங்களை சத்தமில்லாமல் செய்வதை, அ.தி.மு.க., பாராட்ட முன் வர வேண்டும். கோரிக்கை வைத்தவர்களுக்கும், வைக்காதவர்களுக்கும் சேர்த்து, ஸ்டாலின் அரசு எடுத்த உன்னதமான நடவடிக்கையை பாராட்ட மனமில்லாமல், தி.மு.க., அரசை, 'விடியா அரசு' என பழனிசாமி பேசுவது, அரசியல் முதிர்ச்சியின்மையை எடுத்துக் காட்டுகிறது.

இவர், திராவிட மாடல் ஆட்சிக்கு இப்படி வக்காலத்து வாங்குறது, எதை எடுத்துக் காட்டுதுனு புரியலையே!






      Dinamalar
      Follow us