PUBLISHED ON : அக் 18, 2024 12:00 AM

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர்ஜான்பாண்டியன் பேட்டி: ஒரு
பட்டத்து இளவரசருக்கு பட்டம் அளிப்பதை போன்று, முதல்வர் ஸ்டாலின், மகன்
உதயநிதிக்கு இளவரசர் பட்டம் வழங்கி உள்ளார்; இதை வரவேற்கிறேன். மற்றவர்கள்
அதை வாரிசு அரசியல் என கூறுகின்றனர். வாரிசை நம்புவதை விட்டு, அவர்களுடன்
இருக்கும் அமைச்சர்களையும், சீனியர்களையும் நம்ப முடியுமா? அதனால் தான்
உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
'இன்பநிதி தலைமையையும் ஏற்க தயார்'னு அமைச்சர்கள் அணிவகுக்கும் போது, சீனியர், ஜூனியர் என்ற பேச்சுக்கே இடமில்லையே!
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க பொதுச்செயலர் கோபிநாத்அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள்பாதுகாப்பு சட்டம் 2016ன்படி, 'மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர்கள் பணிக்கு வருவதில்இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். அந்த நாட்களை, அவர்கள் பணிக்கு வந்த நாட்களாக கருத வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. முதல்வர், இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அடுத்த மழைக்கு முதல்வர் இதை அமல்படுத்துவார்னு எதிர்பார்க்கலாம்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: வருங்கால தலைமுறையை ஈர்ப்பதற்கான வழியும், வாய்க்காலும் இல்லாத முதியோர்இல்லமாகி, மண்டலம், ஜாதி எனும் பாகப் பிரிவினைக்குள் அ.தி.மு.க.,சிக்கி இருக்கிறது. இதனால் கட்சி ஒன்றாகுமா இல்லை பிளவுகள் இன்னும் கூடுதலாகி, ஒன்றுக்கும் ஆகாது போகுமா எனும் அபாய கட்டத்தில் இருக்கிறது.
தளவாய் சுந்தரம் போன்ற சீனியரின் பதவிகளையே பறித்து,'மாஸ்' காட்டுறார் பழனிசாமி... இவர் இன்னும் அரைத்த மாவையேஅரைச்சுட்டு இருக்காரே!
பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா அறிக்கை: தமிழகத்தின் மழைக்கால நிலவரம், நீர்வழி பாதைகளின் நிலை, குளம், ஏரி, மதகு என, அனைத்து நிலவரங்களும் மூத்த அமைச்சர்களுக்கு நன்றாகதெரியும். அவர்களை எல்லாம் புறந்தள்ளி மழை, வெள்ள நிலவரம் குறித்து துணை முதல்வர் உதயநிதிபேசுவது, வெற்று விளம்பரமாக சாமானிய மக்களுக்கு தெரிகிறது.
துணை முதல்வரானதும் கிடைத்த முதல் வாய்ப்புன்னு அவர் களத்துல சுத்தி வர்றாரு... அது பொறுக்கலையா இவருக்கு?