PUBLISHED ON : அக் 20, 2024 12:00 AM

தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிக்கை:
பல
நாட்களாக மழைநீர் வடிகால் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொண்டதால், 20
செ.மீ., மழை சென்னையில் பெய்தபோதும், அன்றிரவே மழைநீர் முழுதும்
அகற்றப்பட்டு விட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வரும் பொதுமக்களுக்காகவே
இரவு - பகல் பாராமல் உழைத்ததன் காரணமாக, சென்னை வெள்ளத்தில் சிக்காமல்
காப்பாற்றப்பட்டது.
வாரிய தலைவராக்கியதற்கு கைமாறா, இந்த அளவுக்கு கூட புகழ் பாடலைன்னா எப்படி?
தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: கொட்டி தீர்த்த கனமழைக்கு பின், தண்ணீர் போக வழி கேட்டால், தண்ணியில போறதுக்கு வழி சொல்லும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகள்மூடாமல் திறக்கப்பட்டுள்ளன.'விடியும்' என்றார் முதல்வர் ஸ்டாலின்; ஆனால், விடியவில்லை. துணை முதல்வரோ,'மழை நீர் வடியும்' என்றார்;ஆனால், வடியவில்லை. மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர். திராவிட மாடல் சாயம், மழையில் வெளுக்கும்.
பா.ஜ., ஆட்சிக்கு வந்து, மழை பெய்தால் மட்டும், சென்னையில்ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காதா என்ன?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'வெள்ளச்சேரியாகஇருந்ததை வேளச்சேரியாக மாற்றி விட்டோம்' என, அமைச்சர் நேரு கூறியுள்ளார். 'வேளர் சேரி'யாக, அதாவது விவசாயிகளின் இருப்பிடங்களின் அருகே இருந்த ஏரியை கூறுபோட்டு விற்று, வேளச்சேரி என பெயரிட்டு, நீர் ஆதாரத்தை மடைமாற்றி, 'வெள்ளச்சேரியாக' மாற்றியது, திராவிட மாடல் அரசு தான்.
முதல்வர் ஸ்டாலின், முன்பு மேயரா இருந்தப்ப வேளச்சேரியில் தானே வசித்தார்... அப்பவே, அந்த ஏரியாவை மேம்படுத்திஇருக்கலாமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: 'சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்ப்பாயத்தின்படி, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பொதுவாக இந்தியாவிலும்,சீனாவிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சங்கங்களை அங்கீகரிப்பதற்கான சட்டம், தமிழகத்திலோ, இந்தியாவிலோஇல்லை' என, தொ.மு.ச., பொதுச்செயலர் சண்முகம்கூறியுள்ளார். அப்படிஆனால் மேற்சொன்ன காரணங்கள் அடிப்படையில், தொ.மு.ச.,வை கலைத்து விட தி.மு.க., முன்வருமா?
தொ.மு.ச., மட்டுமல்ல, எல்லா தொழிற்சங்கத்தையும் கலைத்தாலே தொழிலாளர்களுக்கு சந்தா செலவாச்சும் மிச்சமாகும்!