PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலாபேட்டி: தி.மு.க., அரசின் பிடியில்
தமிழகமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் பெண்களுக்கு மட்டுமின்றி
பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. 'அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் யார்
முதல்வராக இருப்பார்?' என, சிலர் கேட்கின்றனர். மக்கள் விரும்பும் தலைவர்,
முதல்வராக இருப்பார்.
அந்த தலைவரா, ஒருபோதும் இவர் இருக்க போவதில்லை என்பது மட்டும் உறுதி!
புதிய தமிழகம் கட்சி தலைவர்கிருஷ்ணசாமி அறிக்கை: தமிழகத்தில், 75 ஆண்டுகளில் எந்த ஒரு அரசியல் கட்சியும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டில் இதை பேசியுள்ளார். இதை, புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. வரும், 2026ல் கூட்டணி ஆட்சியே, தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.
ஏற்கனவே, அ.தி.மு.க.,வா, பா.ஜ.,வான்னு தொங்கலில் இருந்தீங்க... விஜய் காட்டியஆசையில், இனிமே அ.தி.மு.க.,வா, த.வெ.க.,வான்னு யோசிப்பீங்களோ?
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா பேட்டி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பயணிக்க வேண்டிய துாரம் இன்னும் நிறைய உள்ளது. அவர் சிந்தனையிலேயே குழப்பமாக உள்ளார். கொள்கை ரீதியாககுழப்பத்தில் உள்ளவர்கள், தெளிவான அரசியலை கொடுக்க முடியாது.
அவர் தெளிவாகத் தான் இருக்கார்... விஜயோட அரசியல் வருகையால் இங்கிருக்கும் அரசியல்வாதிகள் தான் குழப்பத்தில் இருக்கிற மாதிரி தெரியுது!
தமிழக விவசாயிகள் பாதுகாப்புசங்க நிறுவனர் ஈசன் முருகசாமிபேட்டி: புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி துவங்கப்பட்டுள்ளது. பல கட்சிகள் இருந்தும் புதிய கட்சியை விஜய் துவக்கிஉள்ளார். அவர் நடத்திய மாநாட்டில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழகத்தில்60 சதவீதம் பேர்விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தான். அவர்களை புறக்கணித்து, 'ஆட்சிக்கு வருவோம்' என, சவால் விடுகின்றனர்.
விவசாயிகளை பற்றி பேசிய கட்சிகள் எல்லாம் என்ன செஞ்சாங்க...? விஜய் பேசாமசெய்வாரா இருக்கும்; பொறுமையாஇருங்க!