PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: ஒரு அரசியல்
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் போகப்போகத் தான்தெரியும்.
சீமானுக்கு ஒருமுறை ஓட்டளித்தால்மறுமுறை சிலர் ஓட்டளிப்பதில்லை. அதனால்,
விஜய் கட்சியால் சீமானுக்கு யதார்த்தமான அச்சம் வந்திருக்கும். சீமானுக்கு
நிரந்தர ஓட்டு வங்கி இல்லாததால்,இந்த அச்சம் வந்திருக்கலாம்.
எது, எப்படியோ... விஜயை, 'ரவுண்டு' கட்டி திட்டுறதால, தி.மு.க.,வை திட்டுறதை சீமான் மறந்துட்டார்... அதை கவனிச்சீங்களா?
தமிழக காங்., பொதுச்செயலர்ரமேஷ்குமார் பேச்சு: தமிழகத்தில்,தி.மு.க., பெற்று வரும் தொடர் வெற்றிக்கு, அதன் வலுவான மதச்சார்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிகட்சிகளின் பங்களிப்புதான் காரணம்; ஆனால், கூட்டணிகட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வுஎன்பது இதுவரை இல்லை. புதிதாக கட்சி துவக்கியுள்ள நடிகர் விஜய், அதிகாரப் பரவலையும், ஆட்சியில் பங்கு என்பதையும் ஆதரிக்கிறார். எனவே, தமிழக அமைச்சர்அவையில் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இப்படி எல்லாம் கோரிக்கை வச்சா ஆட்சியில் பங்கு கிடைக்காது; உங்க பதவிக்கு, 'ஆப்பு'தான் வரும்!
தமிழக பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி பேட்டி: ரஜினி, விஜயைஒப்பிட்டு பேச முடியாது. ரஜினிக்கு நரசிம்மராவ், வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார் போன்ற உச்சபட்ச அரசியல் தலைவர்கள் பலரிடம் நேரடி தொடர்பும், நட்பும் இருந்தது.விஜய்க்கு, அரசியல் தலைவர்களிடம் தொடர்பு இருப்பதாகஎனக்கு தெரியவில்லை.
இத்தனை தலைவர்களோடு நட்பு இருந்தும் என்ன பிரயோஜனம்... அரசியலுக்கு வராம,'ஜகா' வாங்கிட்டாரே ரஜினி!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அ.தி.மு.க.,வை ஒற்றுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும்ஒரு சிறப்பு திட்டத்தோடு, வேலுமணி களமிறங்கி இருக்கிறார். அதை அவர் செயல்படுத்திக் காட்டுவாரா...அழிவின் விளிம்பில் நிற்கும்அ.தி.மு.க.,வுக்கு ஒற்றுமை ஆக்சிஜன் கொடுத்து, கட்சியைசுகப்படுத்துவாரா? ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வினரின்விழிகளும் ஒற்றுமைபேரார்வத்தில் விரியக் காத்திருக்கின்றன.
இந்த பேரார்வம், பன்னீர்செல்வத்துக்கும், அவரோட நான்கு ஆதரவாளர்களுக்கு மட்டும்தான் இருக்கும்னு தோணுது!

