sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : நவ 07, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 07, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச் செயலருமானடாக்டர் சரவணன் அறிக்கை: அ.தி.மு.க.,வின் 53 ஆண்டு கால வரலாற்றில், 31 ஆண்டுகள்ஆட்சியில் இருந்து, மக்களுக்காக பல்வேறுதிட்டங்களை வாரி வழங்கி சாதனை படைத்துள்ளது. ஆனால், தி.மு.க.,வின், 75 ஆண்டுகால வரலாற்றில், தற்போதுள்ளதையும் சேர்த்து, 24 ஆண்டுகள் தான் ஆட்சியில் இருந்துள்ளது. இன்றைக்கு மக்கள் மனதில்பழனிசாமிக்கு ஆதரவு அலையும், ஸ்டாலினுக்குஎதிர்ப்பு அலையும் தான் வீசுகிறது.

இந்த 24 ஆண்டுகளில், 22 ஆண்டுகள் கருணாநிதி,ஸ்டாலின்னு ஒரே குடும்பத்தினர் மட்டுமே முதல்வர்களாக இருந்துள்ளனர் என்ற சாதனையை குறிப்பிட இவர் மறந்துட்டாரே!

தமிழக காங்., பொதுச்செயலரும், வக்கீலுமான சரவணன் பேட்டி: கூட்டணிஆட்சி தத்துவப்படி,தமிழகத்தில் நிறைவடையாமல்இருக்கும் மாநில அரசு சார்ந்த வழக்கறிஞர் பதவிக்கு, காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்குமுன்னுரிமை வழங்க, முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

அரசு வக்கீல் பதவி வழங்கவேயோசிக்கிறவங்ககிட்டே, ஆட்சியிலபங்கு கேட்கிறதெல்லாம் சாத்தியமில்லேன்னு, அடுத்த தேர்தலுக்காகபேரம் பேசத் தயாராகும் காங்கிரஸ் புரிஞ்சுக்குமா?

தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் தாஸ் பாண்டியன்பேச்சு: நடிகர் விஜயின் அரசியல் வரவால், தமிழகபா.ஜ., தலைவர் அண்ணாமலையின் செல்வாக்குகுறையாது. அவரது படிப்புக்கும், அறிவுக்கும், திறமைக்கும்முன், விஜயை ஒப்பிட முடியாது. விஜய் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு கூட்டம்வரும். பா.ஜ.,வுடன் விஜய் கூட்டணி அமைக்க முன்வரலாமே தவிர, நாங்கள் தேடிச் சென்று, அவருடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை.

இவங்க கட்சியை தான், முதல்எதிரியா விஜய் பிரகடனம் பண்ணியிருக்கார் என்பதை மறந்துட்டாரோ?

தமிழக காங்., தலைவர்செல்வப்பெருந்தகை அறிக்கை:பயங்கரவாதத்தை முறியடிப்பதில், ராணுவ வீரர்கள் எப்படி தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, அதை எதிர்த்து போராடுகின்றனர் என்பதை, அமரன் திரைப்படம் உணர்த்துகிறது. இத்திரைப்படத்தை இன்றையஇளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில், படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வினியோக உரிமை, 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்துடையது என்ற ஒரே காரணத்துக்காக, இப்படத்தை யாரும் ஒதுக்கித் தள்ளிட முடியாது என்பது உண்மை தான் என்றாலும், படத்தை புகழும்பெருந்தகை, அதில் சில இருட்டடிப்பு வேலைகள் நடந்திருப்பதை, சுட்டிக்காட்டாமல் விட்டுட்டாரே!






      Dinamalar
      Follow us