PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: வயநாடு
லோக்சபா தொகுதியில், பிரியங்கா மிகப்பெரிய வெற்றி
பெற்றுள்ளார்.வரும் காலங்களில், பா.ஜ.,வின் வெற்றி தொடராது.
இதற்கெல்லாம் சகோதரர் ராகுல் வாயிலாக முற்றுப்புள்ளி
வைக்கப்படும். ஏழு ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் இடம்
பெற்றுள்ளோம். மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற கூடாது
என்பதற்காகவே,தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தோம்.இவங்க மட்டும் தி.மு.க., கூட்டணியில் சேராம போயிருந்தால், தமிழகம் அதோ கதியாகியிருக்குமோ
வி.சி., கட்சி தலைவர்திருமாவளவன் பேட்டி: ஆட்சி என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. தமிழக மக்கள்எப்போது வி.சி., மீது நம்பிக்கை வைக்கின்றனரோ,அப்போது ஆட்சி, அதிகாரத்தை ஒப்படைப்பர்.ஆட்சி, அதிகாரத்தை நோக்கி நாங்கள் பயணப்படுகிறோம்; போராடுகிறோம். வழக்கறிஞர் வெட்டப்பட்டது, ஆசிரியர் கொல்லப்பட்டது போன்ற கொடூரமான செயல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. இவற்றை கட்டுப்படுத்த தவறினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மாறும். தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது.
சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும்போது அரசுக்கு இப்படி முட்டுக்கொடுத்தால், மக்களுக்கு உங்க மேல என்னைக்குமே நம்பிக்கை வராது!
பிரபல, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரிசெய்ய முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், 2026 சட்டசபை தேர்தலில், அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டிய நிலை வரும்.
முதல்வரை சும்மா வம்புக்கு இழுத்துட்டு இருந்தால், அதற்கானவிலையை இவர்தான் கொடுக்க வேண்டி இருக்கும்னு தோணுது!
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: அனைத்து வழக்குகளுக்கும் சி.பி.ஐ., விசாரணை வேண்டும்என்பது தவறு. இருப்பினும்,திருநெல்வேலியில் காங்கிரஸ்தலைவர் ஜெயகுமார் கொலைசெய்யப்பட்ட வழக்கில், இதுவரை சி.பி.சி.ஐ.டி., நடத்திய விசாரணையை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். தமிழககாவல் துறை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. தமிழகபோலீசார் அதிக திறமை உள்ளவர்கள்.
இதுக்கு நேரடியாகவே,'ஜெயகுமார் கொலை வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கணும்'னு சொல்லி இருக்கலாமே!

