PUBLISHED ON : நவ 30, 2024 12:00 AM

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்அறிக்கை: '
அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலர் பன்னீர்செல்வம்பேச்சு: சென்னை, அண்ணாநகரில் கட்டுமான தொழிலாளியின், 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நல்ல சம்பளம் மட்டுமல்ல; உயிர், உடல், உடைமைக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வடமாநில தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில், அந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமும் முதல்வர் வழங்க வேண்டும்.
போதை கலாசாரத்தை ஒழிக்காதவரை, யாருக்கும் இங்கு பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கணவருக்காக கலைத் துறையை விட்டுக் கொடுத்தார். கட்சிக்குதலைமை அலுவலகம் கட்ட, தான் உழைத்து வாங்கிய சொத்தை விட்டுக் கொடுத்தார்.கட்சி எதிர்காலம் கருதி, தன் அரசியலை ஜெயலலிதாவிடம் விட்டுக் கொடுத்தார். அதுவும், ஒரே ஒரு தேர்தலில்தோற்றதுமே ஜானகி இவ்வாறுசெய்தார். அவரை பின்பற்றி, 10 தேர்தல்களில் தொடர்ந்து தோற்ற பழனிசாமி, அரசியலில்இருந்து விலகி, அ.தி.மு.க.,வைஅடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அந்த அடுத்த தலைமுறை, நிச்சயம் இவங்க தலைவர் இல்லை!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'தடுக்கி விழுந்தால்மருத்துவமனை என்ற அளவில்தமிழக மருத்துவ கட்டமைப்புஉள்ளது' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், 'சுகாதார துறையில் கட்டமைப்பு என்பது கட்டடமோ, கருவிகளோ இல்லை... பணியில் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் தான் உண்மையான கட்டமைப்பு' என, சட்டசபையில் டாக்டர் எழிலன் பேசியதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
எழிலனும் அமைச்சராக இருந்திருந்தா, அப்படி பேசியிருக்க மாட்டார்!

