PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மதுரை எம்.பி., வெங்கடேசன் அறிக்கை: பாம்பன் ரயில்
பாலம், 1914ல் கட்டப்பட்டது. அது, அன்றையகாலத்தில் ஒரு பொறியியல்
அதிசயமாகும். அதற்கு பதிலாக, தற்போது புதிய பாலம் ஒன்று கட்டி
முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை,
ரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக
விமர்சித்துள்ளார். இது குறித்து, ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,சிவா பேச்சு: பார்லிமென்டில்எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. விவாதங்கள் நடந்தால், சபை ஒத்தி வைக்கப்படுகிறது. பிரதமர் பார்லிமென்டிற்கு வருகிறார்; அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார்.ஆனால், பார்லிமென்டின் உள்ளே சபைக்கு வருவதில்லை.விவாதத்தில் பங்கேற்பதற்கு தயாராக இல்லை. யாராவது கேள்வி கேட்டால், எழுந்து பதில் சொல்லும் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்.
தமிழகத்தில் இவரது தலைவர்ஸ்டாலினும், 'எதிர்க்கட்சிகளுக்குபதிலளிக்க மாட்டேன்'னு சொல்றது மட்டும் சரியா?
பா.ம.க., பொருளாளர் திலகபாமா பேட்டி: மக்கள்பிரச்னைகளை தான் அறிக்கையாக வெளியிடுகிறார் ராமதாஸ். அவர் வேலை இல்லாதவர் என்றால், 'முரசொலி' இதழில் தினமும் கடிதம் எழுதிய கருணாநிதி வேலையில்லாமல் தான் எழுதினாரா? 2006ம் ஆண்டில்,தி.மு.க., மைனாரிட்டி அரசுக்குபா.ம.க., ஆதரவு கொடுத்தது.மூத்த தலைவர் ராமதாசின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அவரை விமர்சித்ததற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அன்று காங்கிரசின் 35 எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த ஆதரவில்தான், 2006ல் கருணாநிதி அரசு அமைந்தது என்ற உண்மையை மறைக்கலாமா?
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிபேச்சு: நாட்டில், 10 ஆண்டுகளாக இளம் தொழில்முனைவோருக்கான அரசாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், வாய்ப்புகளையும்அளித்து வருகிறது. பல சாதனைகளை இளைஞர்கள்நிகழ்த்தி வருகின்றனர்; ஆனால்,அவர்கள் அதிகம், 'ரிஸ்க்' எடுக்கதயங்குகின்றனர். தொழில் முனைவோர் அதிகம், 'ரிஸ்க்' எடுங்கள். அதற்கேற்ப வாய்ப்புகளை வழங்கும் நாடாக இந்தியா உள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி.,யை எவ்வளவு ஏத்துவாங்கன்னு தெரியாம, இளைஞர்கள் எப்படி, 'ரிஸ்க்' எடுப்பாங்க?