sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:

'எல்லாரும் வீட்டில் இருங்கள். வெளியில் செல்ல வேண்டும் என்றால், டாஸ்மாக் கடைக்கு மட்டும் செல்லுங்கள்' என்ற அறிவிப்பை மறைமுகமாக விடுத்து, மழை, புயல் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்து, சாராய விற்பனையில் புரட்சி செய்த சாராய மாடல் அரசு தான் இது.குளிருக்கு இதமா, 'குடி'மகன்கள் ஒரு குவார்ட்டரை அடிச்சுட்டு குப்புற படுத்து துாங்கட்டும்னு பெருந்தன்மையா கடையை திறந்து வச்சிருப்பாங்களோ?



தமிழக பா.ஜ., துணை தலைவர்நாராயணன் திருப்பதி அறிக்கை:டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கஅனுமதி கேட்டது மட்டுமல்ல...நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது, ஸ்டெர்லைட் ஆலை அமைக்க காரணமாக இருந்தது... காவிரி நதியில் பல அணைகளை கர்நாடக அரசு எழுப்ப தடையில்லா சான்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிப்படுத்தக் கூடாது என்று விலங்குகள் பட்டியலில் இணைத்தது என, தமிழகத்தின்அனைத்து பிரச்னைகளுக்கும்,தி.மு.க., அரசு தான் காரணம்.

பிள்ளையை கிள்ளி விட்டு,தொட்டிலை ஆட்டுறது தி.மு.க.,வுக்கு கைவந்த கலையாச்சே!

தமிழக முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: வழி வழியாய் தொடர்கிற பிழையை சரிசெய்தால்மட்டுமே, 'வரலாறு காணாத மழை' என்று ஆட்சியாளர்கள்அசடு வழிகிற அவலம் தொலையும். உட்கட்டமைப்பைமேம்படுத்தும் உள்ளாட்சி துறையில், லஞ்சத்துக்கு அலையாத ஒரு யோக்கியரைஅமைச்சராக்கி, கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் பெறாமல்,ஒரு ஐந்தாண்டு காலத்திற்குபணிகளை கவனத்தோடுமேற்கொண்டாலே போதும்...ஐம்பதாண்டு காலத்திற்கு மக்களுக்கு சிரமம் இருக்காது.

இவர் சொல்ற அந்த யோக்கியர்,கடைந்தெடுத்தாலும் திராவிட கட்சிகளில் தேறவே மாட்டார்!

தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: புயல்,வெள்ளம் என்றால், பொதுமக்களுக்கு உணவு பொட்டலம்,பள்ளிகளில் தங்க வைத்தல்,முதல்வர் பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில்ஆய்வு என்ற பெயரில் போட்டோஷூட், பாதிக்கப்பட்டஇடங்களுக்கு கேமரா சகிதம்சென்று படப்பிடிப்பு, பின்,போர்க்கால நடவடிக்கை என அறிக்கை... இது தான் தி.மு.க., ஆட்சியின்லட்சணம்.

புயல், மழை அடித்தால், குஜராத், மத்திய பிரதேசம்னு பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எல்லாம் என்ன செய்வாங்களாம்?






      Dinamalar
      Follow us