PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., பிரமுகரும், நடிகருமான சரத்குமார்அறிக்கை:
'பெஞ்சல்' புயல் வடகடலோர மாவட்டங்களில், சில பாதிப்பை ஏற்படுத்தி,
சில பகுதிகளில் கோரமுகம் காட்டிச் சென்றதில்,பல குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. இந்தகடினமான சூழலில், மக்கள்
ஒவ்வொருவரும்பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும்,
ஆறுதலாகவும் உதவிக்கரம் நீட்டி, ஒட்டுமொத்த தமிழகமும்
உங்களுடன் நிற்கிறது என ஊக்கம் அளிப்போம்.உங்க கட்சி தலைமை வகிக்கும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டினா நல்லாயிருக்கும்
இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது பேச்சு: 'டங்க்ஸ்டன்' சுரங்கத்திற்கு, மாநில அரசின் எதிர்ப்பை மீறி,ஏல அறிவிப்பு வெளியிட்டு ஆய்வு நடத்தும் தகவல் வெளியானதும், மதுரை மாவட்ட கிராம சபை கூட்டங்களில் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக, மக்கள் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். இது வெறும் 5,000 ஏக்கர் நிலப்பரப்புடன் முடிந்து விடும் திட்டம் அல்ல. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என, மூன்று மாவட்டங்களை அழிக்கும் நாசகாரத் திட்டம்.
இப்படியே எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவிச்சா, தென் மாவட்டங்கள் தொழில் வளத்துல எப்படி முன்னேறும்?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: விழுப்புரத்தில், வெள்ளசேதங்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடிமற்றும் அதிகாரிகள் மீது, பாதிக்கப்பட்ட மக்கள், சேற்றைவாரி வீசியுள்ளது, தி.மு.க., அரசுமீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதை உணர்த்துகிறது. மக்கள், தங்கள் குடும்பங்களைபாதுகாக்க முடியாத சூழ்நிலையில் வெகுண்டு எழுவர் என்பதை உணர்வதோடு, மக்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டியது தான் என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நினைவில் கொள்ள வேண்டும்.
தி.மு.க.,வின் மூன்றரை ஆண்டு ஆட்சிக்கு, இது ஒரு எச்சரிக்கை மணியாகவே தெரியுது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: காலம் காலமாக, மழை பெய்யும் நவம்பர், டிசம்பர் மாதங்களில்,ஆட்சி செய்யும் கட்சியை திட்டித் தீர்ப்பதும், அப்படிதிட்டி சபித்த கட்சிகளுக்கே, ஏப்ரல், மே மாதங்களில் ஓட்டு போட்டு முட்டுக்கொடுப்பதும் வாடிக்கை என்பதே, தமிழகத்தின் வரலாறு.விழி சிவக்கும் கோபம், விரல்அழுத்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பிரதிபலிக்காதவரை, புலம்பல்கள் தொடர் கதைகளே!
எங்ேக...? பொங்கி வரும் கோபத்தை தான் காந்தி நோட்டைக்கொடுத்து, வடிய வச்சிடுறாங்களே!