PUBLISHED ON : டிச 13, 2024 12:00 AM

கன்னியாகுமரி தொகுதி காங்., - எம்.பி., விஜய்வசந்த் பேச்சு: பாமர
மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மைதா, ரவை, கடலை மாவு போன்ற
அத்தியாவசிய உணவுப் பொருட்கள்மீதான ஜி.எஸ்.டி., ஏழை மக்களையும்,
விவசாயப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., விவசாயிகளையும் மிகவும்
பாதிக்கின்றன. மத்திய அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும்
உதவும் வண்ணமாக கூடுதல் நிதி வழங்க வேண்டும். 'கிசான் சம்மான்' நிதி
திட்டம், நீர் பாசன திட்டங்கள் மற்றும்
விவசாய ஆராய்ச்சிக்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்பேச்சு: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, 'ஜாதி ரீதியான குலத்தொழில்' எனக் கூறி, தமிழகத்தில் செயல்படுத்த மறுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.விஸ்வகர்மா திட்டத்தின் விண்ணப்பத்தில், எந்த இடத்திலும் ஜாதி குறித்து கேட்கவில்லை. ஆனால், தமிழக அரசின் கலைஞர் வீடுகட்டும் திட்ட விண்ணப்பத்தில்,ஜாதி குறித்த விபரம் கேட்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் எல்லா திட்ட விண்ணப்பத்திலும் ஜாதி பிரதானமாக இருக்கும்னு எல்லாருக்கும் தெரியுமே!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் பேட்டி: எதையும் எதிர்த்து போரிட்டு, துாய கட்டமைப்பை ஏற்படுத்துவதுதான் ஒவ்வொரு புரட்சியாளரின் கடமை. எதுவுமேஇல்லாமல், கட்டமைப்பைகைப்பற்ற நாங்கள் கருணாநிதியின் மகனோ, பேரனோ இல்லை. மாறுதல் என்பது ஒரு வினாடியில் வராது. அதுபோல திரை கவர்ச்சியையும் வீழ்த்தி, எழுந்து மேலே வர வேண்டிய தேவை உள்ளது.
இவரும் திரையில் தோன்றியவர் தானே... விஜயை தம்பி என்பதும், அப்புறம் வம்புக்கு இழுப்பதும் இவருக்கு வழக்கமா போச்சு!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: மீண்டும் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழையோ, கனமழையோ ஏற்பட்டால், அதிலிருந்து விவசாய பயிர்களை, மக்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும். 'பெஞ்சல்' புயலால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரணஉதவிகள் போதுமானதல்ல என்பதை உணர்ந்து, அதை உயர்த்தி வழங்க வேண்டும்.
பெஞ்சல் புயல் பிரச்னையில் இருந்தே மீளாத வங்க, அடுத்த மழையை சமாளிக்கவா தயாராக போறாங்க?

