sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : டிச 30, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 30, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை:

இந்த ஆட்சியில் நடக்கும் ஒவ்வொரு அவலத்தையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களின் மனங்களை ஆட்சி மாற்றத்திற்கு சூடேற்றுவதற்கு பதிலாக, அவற்றை தணிக்கும் வகையில் செயல்படுவது, ஒரு வகையில் மக்களை ஏமாற்று வதற்கு ஒப்பான பிழைப்பு. எனவே, அரசே, சாட்டைகளை ஆட்சியாளர்களுக்கு எதிராக சுழற்றுங்கள்; மாணவியர், மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்க, மடை மாற்றம் செய்ய சுழற்றக் கூடாது.

தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் ரகசிய உறவு இருக்குன்னு சொல்றாரோ?

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர், மல்லை சத்யா பேச்சு:

வைகோ எழுதிய, 'சிறையில் விரிந்த மடல்கள்' நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், 'வைகோ என்னை சந்திக்கும் போதெல்லாம் தனிப்பட்ட நலனுக்காக அல்லாமல், தமிழகத்தின் திட்டங்களுக்காக, ஜீவாதார உரிமைகளுக்காக மட்டுமே சந்திப்பார்' என, பாராட்டி பேசியது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.

இதன் வாயிலாக, 'தி.மு.க., தலைவர்கள், மன்மோகன் சிங்கிடம் பொது நலனுக்காக எந்த கோரிக்கையும் வச்சதே இல்ல'ன்னு சொல்றாரோ?

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:

'கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கன்னட மொழியிலேயே பெயர் பலகை வைக்க வேண்டும்' என, அம்மாநில அரசு தனி சட்டம் இயற்றி, அதை தீவிரமாக நடை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற ஆட்சி மொழி சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராடுவோரை, தமிழக அரசே கைது செய்து சிறைப்படுத்துவதை விட கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?

அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமையை விட, இது பெரிய கொடுமையா தெரியலை!

தமிழக, காங்., - எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் பேட்டி:



கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இருந்ததற்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையே சாட்சி. இன்று, பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கின்றனர் என்றால், அது, முதல்வர் ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கை தான். பெண்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

அடடா... புகார் கொடுத்ததையே சாதனையாக பேச இவரால் மட்டுமே முடியும்!






      Dinamalar
      Follow us