PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கட்சியில்
உள்ளவர்கள் குற்றம் செய்தால், அது கட்சியின் குற்றமாகாது.ஆனால்,
அப்படி குற்றம் சாட்டப்படுவோர், தங்கள் கட்சியிலேயே இல்லை என
மறுத்தால்,அது குற்றம் தான். தைரியமாக கட்சியில் இருந்து நீக்கி
நடவடிக்கை எடுப்பதே, நேர்மை, ஒழுக்கம், நியாயம்.
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி:எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருக்க வேண்டும்என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாக கேட்கிறீர்கள். அதை பற்றி எனக்கு தெரியாது. அவர்கள்,10.5 சதவீதம் வன்னியர் இடஒதுக்கீடு அளித்தால், தி.மு.க.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவுஅளிப்பதாகக் கூறியது பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை.
'தெரியாது, கவலைப்படவில்லை'ன்னு விரக்தியானபதிலாகவே இருக்கே... உண்மையில் துணை முதல்வர் பதவி தரலை என்ற ஏக்கம் இருக்கோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அன்றையபொள்ளாச்சி பாலியல்சம்பவங்கள் துவங்கி, தற்போதைய அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்திருக்கும் கொடூரம் வரை, இவற்றுக்கு காரணம், சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் ஒழுக்கச் சீரழிவுகள்; விஞ்ஞான சாதனங்களை விபரீதங்களுக்கு பயன்படுத்ததுாண்டும் சுய கட்டுப்பாடற்றவக்கிரங்கள்; சட்டம், காவல், நீதி, சிறை உள்ளிட்ட அமைப்புகளின் கடுமையற்றமேம்போக்கும், அசிங்கமான அரசியல் தலையீடுகளும் தான்.சட்டம் விடாது என்ற அச்ச உணர்வை தரும் விதத்தில் சட்டங்களும், விதிகளும் திருத்தப்பட வேண்டும்.
அப்ப, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், தி.மு.க.,வை குற்றஞ்சாட்டுவது சரியல்ல என்கிறாரா?
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தமிழகத்தில் தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே போகின்றன. குற்றங்கள் அதிகரித்து, வன்முறை மாநிலமாக மாறி வருவது, மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், வருத்தத்தையும் உண்டாக்குகிறது. தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய விசாரணை செய்து, காலம் தாழ்த்தாமல் உடனே தண்டனைவழங்க வேண்டும்.
அதான், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியை கைது செய்து, மாவு கட்டும் போட்டுட்டாங்களே!