PUBLISHED ON : ஜன 21, 2025 12:00 AM

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் நட்டா வழிகாட்டுதலின்படி, தமிழக பா.ஜ., புதிய மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழகத்தில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, நல்லாட்சியை கொண்டு வரவும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, தமிழகத்தை அழைத்துச் செல்லவும், அயராது உழைக்க வேண்டும்.
வாஸ்தவம் தான்... பதவி வாங்கியவங்க எல்லாம் திராவிடகட்சியினர் பாணியில், கடுமையா களப்பணிகள் செய்தால் தான், தமிழகத்தில் தாமரை மலரும்!
தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் அப்துல் கரீம் பேட்டி: சட்டம் - ஒழுங்கு பிரச்னையை, தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வட மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கொந்தளிப்பது போல், சென்னை அண்ணா பல்கலை யில் நடந்த சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும், அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு வங்க மருத்துவ கல்லுாரி மாணவி பாலியல் வழக்கு போல, அண்ணா பல்கலை சம்பவத்திலும் விரைந்து நீதி கிடைத்தால் நல்லது!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்போம் என்பது ரகசியம். தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகங்கள் இடைத்தேர்தலில் அரங்கேறும் என்பதால் தான், நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை.
'ஆடத் தெரியாத நாட்டியக்காரி, தெரு கோணல்'னு சொல்றதா கிராமங்கள்ல ஒரு சொலவடை உண்டு... அந்த மாதிரி தான் இருக்கு இவரது சால்ஜாப்பும்!

