sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் திகழ்கிறது' என்றும், 'வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, தமிழக சுகாதாரத்துறை உள்ளது' என்றும், சட்டசபையில் கவர்னர் உரையில் பெருமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் இல்லாத அவல நிலை தொடர்வதை அரசு கண்டுகொள்ளவில்லையே?

னைகளில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் இல்லாத அவல நிலை தொடர்வதை அரசு கண்டுகொள்ளவில்லையே?

ஆட்சியாளர்கள் தயாரிக்கும் கவர்னர் உரையில், இவர் சொல்ற குறைகளை எல்லாம் எழுதுவாங்களா என்ன!



அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட எந்த பண பலன்களும், தற்போது வரை வழங்கப்படவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து, தி.மு.க., அரசு காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது.

உயிரை பணயம் வைத்து பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு, அரசு காட்டும் 'நன்றி'க்கு, சட்டசபை தேர்தலில், 'கைமாறு' உண்டு!

தமிழக வனத்துறை அமைச்சர்பொன்முடி பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் தோல்வி பயத்தாலும், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் இருப்பதை அறிந்தும், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிவிட்டன. அ.தி.மு.க., -- பா.ஜ., என அனைத்து கட்சிகளும் போட்டியிடத் தயங்கும் நோக்கமே, அங்கு தி.மு.க., மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதால் தான்.

தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் இருக்காங்க என்றால், இவர் மீது சேறு வீசியது வேற்று கிரக வாசிகளா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேச்சு: எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவு திட்டம், இன்று நாடு முழுதும் பின்பற்றப்படுகிறது. அவர் இறந்த பிறகு, அ.தி.மு.க.,வில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்ததை, 1.50 கோடி தொண்டர்களாக மாற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2014ல் நாடு முழுதும் பிரதமர் மோடி அலை வீசியபோது, தமிழகத்தில் 'மோடியா, லேடியா' என கேட்டு வென்றார். 2016 தேர்தலிலும் கூட்டணியின்றி தனித்து வென்றார்.

அதெல்லாம் சரி... 1.50 கோடி தொண்டர்களை மறுபடியும் 17 லட்சத்துக்கு கொண்டு போய் விட்ருவீங்க போலிருக்கே!






      Dinamalar
      Follow us