PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்வி மையத்தின் இயக்குநரான காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது, மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். இது ஐ.ஐ.டி., போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: 'பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிக்க, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்' என, தி.மு.க., தலைமை அறி வித்தது. ஆனால், தமிழகத்தில் கல்வி நிலையம், மருத்துவமனை என, எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து விட்டன. சிறப்பு நீதிமன்றம் அமைப்போம் என்ற வாக்குறுதியையும் மறந்து விட்டனர். அதைக் கண்டித்து, போராடக்கூட அனுமதி கிடைப்பதில்லை.
சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதை அவங்களே ஒப்புக்கொண்ட மாதிரி ஆகிடாதா?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் விபத்து அல்ல; கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் திட்டமிட்டு கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணத்தை உரிய விசாரணை வாயிலாகக் கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆட்சி முடியுறதுக்குள்ள நடவடிக்கை எடுப்பாங்களா என்பது கேள்விக்குறிதான்!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவரும், பாடநுால் வாரியத்தின் முன்னாள் தலைவருமான லியாகத் அலிகான் அறிக்கை: மத்திய அரசின் நிதி பகிர்வு முழுமையாக கிடைக்காத நிலையிலும், தமிழக அரசின் பல்வேறு பொருளாதார பிரச்னைகளை சமாளித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை களை பாதுகாக்கும் தி.மு.க., அரசு, 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலிலும் ஆட்சி அமைக்கும்.
அப்படி ஆட்சி அமைத்து விட்டால், இவருக்கு வாரிய தலைவர் பதவி உறுதி!

