தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 15

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 15

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 15


PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி: தமிழகத்தில் போதை, துப்பாக்கி கலாசாரம் பல ஆண்டுகளாக ஊடுருவியுள்ளது. போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு அவற்றை தடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கொலைகள், கொள்ளைகள் நடந்துள்ளன என்ற விபரங்களை அந்தந்த மாவட்ட போலீஸ் நிர்வாகங்கள் வெளியிட வேண்டும். ஆனால், த.வெ.க., அரசு பதவியேற்ற கடந்த மே மாதத்துக்கு பின் தான், கொலை, கொள்ளைகள் நடப்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது.

‘எல்லா ஆட்சிகளிலும் கொலை, கொள்ளைகள் சகஜம் தான்’னு சப்பைக்கட்டு கட்டாம, இனியும் கொலை, கொள்ளைகள் நடக்காம தடுப்பது சம்பந்தமா ஆளுங்கட்சிக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகளை நீங்க தரலாமே!

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் ஊடக பிரிவு பொதுச் செயலர், ‘அஸ்பயர்’ சுவாமிநாதன் அறிக்கை: கடந்த 2016ம் ஆண்டு அ.தி.மு.க., – எம்.பி., சசிகலா புஷ்பா மீது சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். தற்போது, த.வெ.க.,வைச் சேர்ந்த, சட்டசபை துணை சபாநாயகர் ரவிசங்கர், புகார் கூற வந்தவரை தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை, துணை சபாநாயகர் பதவியில் இருந்து ரவிசங்கர் விலகுவாரா?

தற்போது பா.ஜ.,வில் இருக்கும் சசிகலா புஷ்பாவிடம், ‘அந்த சர்ச்சையில் இருந்து எப்படி மீண்டு வந்தீங்க’ன்னு ரவிசங்கர் பாடம் கேட்கலாமே!

த.வெ.க.,வை சேர்ந்த தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி: மாணவர்களுக்கு மிகச்சிறந்த கல்வியை அளிக்க, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்து வருகிறார். கல்வியை மாணவர்களிடம் மகிழ்ச்சியான ஒன்றாக கொண்டு செல்வதற்காக, ‘கேக்’ வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல் படுத்தி உள்ளார்.

கேக் வழங்கிட்டா மட்டும் மாணவர்கள் மண்டையில படிப்பு ஏறிடுமா...? அர்ப்பணிப்புடன் கூடிய தகுதியான ஆசிரியர்களும் அவங்களுக்கு அமையணும்!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், த.வெ.க., பிரமுகருமான செம்மலை அறிக்கை:


சர்க்காரியா கமிஷன் விசாரித்து வெளியிட்ட, முந்தைய தி.மு.க., ஆட்சியின் முறைகேடுகள், விஞ்ஞான முறை ஊழலில் ஊற்றுக்கண் என்றால், பின்னர் வெளிவந்த, ‘2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு’ என்பது, அதன் பரிணாம வளர்ச்சியாகும். தற்போது தி.மு.க., ஆட்சி கால இறுதியில், ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு நுால்கள் கொள்முதல் செய்ததில் நடந்தேறிய முறைகேடுகள் என்பது விஞ்ஞான முறை ஊழலின் உச்சக்கட்டம்.
- ‘விஞ்ஞானம் வளர வளர, தி.மு.க.,வினரின் ஊழல்களும் அதுக்கு ஏற்ப விஸ்வரூபம் எடுக்குது’ன்னு வஞ்சப்புகழ்ச்சியா பாராட்டுறீங்களோ?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us