தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 14

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 14

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 14


PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேட்டி:

சிவகுமார் கர்நாடக முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது முதல், மேகதாது அணையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். 'காவிரியில் நாங்கள் அணை கட்டுவோம்' என, சொல்வதே அபத்தம். தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, ஒரு பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த முடியாது. 'நாங்கள் அணை கட்டுவோம்' என சொல்வது, முடியாத காரியம்.

காரணம், இரு மாநிலங்களுக்கும் காவிரி பொதுவானது. எந்த மாநிலமும் தன்னிச்சையாக அணை கட்டுவது முடியாத காரியம்.

தி.மு.க., ஆட்சியில், நீங்க நீர்வளத் துறை அமைச்சராக இருந்தப்ப பேசியது மாதிரியே பேசுறீங்களே... ஆட்சி பறிபோய் ஆறு மாசமாகிடுச்சு என்பதை மறந்துட்டீங்களா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:

இந்த தீபாவளிக்கு விஜய் படம் வரவில்லை. அந்த குறையை போக்கும் வகையில் த.வெ.க.,வினர், 'நாங்கள் தீபாவளி படம் ரிலீஸ் செய்கிறோம்' என, கத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள் எடுத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தவறு செய்யும் எம்.எல்.ஏ.,க்களை கண்டிக்கும் எண்ணம் முதல்வருக்கு இல்லை; மாறாக, தீபாவளி பரிசு கொடுக்கிறார். கள்ளக்குறிச்சி கலெக்டரின் இடத்தில் நான் இருந்திருந்தால், நிச்சயம் அந்த எம்.எல்.ஏ.,வை, 'என்கவுன்டர்' செய்திருப்பேன்.

பீஹார், உ.பி., போன்ற மாநிலங்களில் கூட கலெக்டர்கள், 'என்கவுன்டர்'கள் பண்ணி யாரும் கேள்விப்பட்டதில்லையே!

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலருமான மயிலை வேலு அறிக்கை:

த.வெ.க., ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் எத்தனை நாளைக்கு தான் எல்லாவற்றுக்கும் தி.மு.க.,வையே காரணம் காட்டப் போகிறீர்கள்? நாங்கள் ஆட்சியை முடக்க நினைக்கவில்லை; முடங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து தட்டியெழுப்பி கொண்டிருக்கிறோம்.

நீங்க தட்டி எழுப்ப எழுப்ப, உங்க கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தான், அடுத்தடுத்து 'கம்பி' எண்ண வேண்டி வரும்!

பா.ஜ., தமிழக முன்னாள் தலைவரும், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவருமான அண்ணாமலை பேச்சு


கள்ளக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., மீதான குற்றச்சாட்டு, ஒரு சாமானிய குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசு இதே அளவு பொறுமையுடன் புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்து கொண்டிருக்குமா? சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?
- சம்பந்தப்பட்ட கலெக்டரே எந்த புகாரும் தராத சூழலில், ஒரு தவறு நடந்திருக்கும்னு எதிர்க்கட்சிகளே முடிவுக்கு வந்தா என்ன அர்த்தம்?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us