தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 17

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 17

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 17


PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நடிகருமான எஸ்.வி.சேகர் பேட்டி: நடிகர் விஜயை எனக்கு 30 ஆண்டுகளாக தெரியும். அவர் யாரையும் புறம் பேச மாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டு என அமைதியாக இருப்பார். அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தேர்தலுக்கு பணம் செலவழிக்கவில்லை. விஜய் என்ற முகத்திற்காகத் தான் த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிப் பெற்றனர். அதேநேரம், தாங்கள் செய்யும் அயோக்கியத்தனம் முதல்வர் விஜயை பாதிக்கும் என, எம்.எல்.ஏ.,க்கள் கருத வேண்டும். அதனால் முதல்வர் விஜய், தவறு செய்த எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான், மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கும் தவறு செய்ய பயம் வரும்.

விஜய் அமைதியானவர் தான்... ஆனா, முதல்வர் ஆன பிறகும் எல்லா விஷயங்களிலும் அமைதி காப்பது சரியா?

பா.ஜ., தேசிய துணை தலைவர் ராம் மாதவ் பேட்டி: காங்கிரஸ் வெற்றி பெற்றால், ‘நேர்மையான வெற்றி’ என்பர். தோற்றால், தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவர். காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகத்தை, ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பார்த்தார். விரைவில் த.வெ.க., தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் பார்ப்பார் என நம்புகிறேன்.

காரியம் ஆகும் வரை காலை பிடிப்பதும், காரியம் முடிஞ்சதும் கழுத்தை பிடிப்பதும் காங்கிரசுக்கு கைவந்த கலையாச்சே!

இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் பேச்சு: தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் எங்களுக்கு பகை சக்திகள் இல்லை. பா.ஜ., தான் எங்களுக்கு நேரடி கொள்கை ரீதியான எதிர்க்கட்சி. பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., – பா.ம.க., போன்ற கட்சிகள் வெளியேற வேண்டும் என விரும்புகிறோம். பா.ஜ., கொள்கைகளை யார் அதிகம் எதிர்க்கின்றனர் என்பதை பொறுத்தே, அந்த கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம்.

இப்படி எல்லாம் நிபந்தனைகள் விதித்தால், எதிர்காலத்தில் உங்களை யாருமே கூட்டணியில் சேர்த்துக்க மாட்டாங்க!

திராவிட வெற்றிக் கழகம் கட்சி தலைவர் மல்லை சத்யா அறிக்கை:


அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகம், போலீஸ் துறை உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி வருவது கவலையளிக்கிறது. இதற்கும் வழக்கம்போல், ‘கடந்த தி.மு.க., ஆட்சி தான் காரணம்’ எனக் கூறி த.வெ.க., அரசு பொறுப்பை தட்டிக் கழிக்காமல், இரும்புக்கரம் கொண்டு சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
- தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளைகளே நடக்காத மாதிரி பேசுறீங்களே... அந்த ஆட்சியின், ‘அருமை, பெருமை’களை உங்க முன்னாள் தலைவர் வைகோ தினமும் புட்டு புட்டு வைப்பதை நீங்க கவனிக்கிறது இல்லையோ?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us