தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 20

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 20

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 20


PUBLISHED ON : நவ 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமுற்றோர் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் தற்போது முதல்வர் விஜய் அறிவித்திருப்பதை அவரது மனிதாபிமான நடவடிக்கையாக கருது கிறேன். அவருக்கு என் பாராட்டுக் களை தெரிவிக் கிறேன்.

இந்த சம்பவம் நடந்தப்ப ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இதை வரவேற்று அறிக்கை வெளியிடுவாரா?

தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை: டில்லியில் நடந்த சோனியா புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் விஜயிடம், ‘நிலவு இல்லா வானமா, இனிப்பு இல்லா பானமா, நேரு படம் இல்லாத குழந்தைகள் தினமா’ என கேட்கும் தைரியம் காங்கிரசாருக்கு இருந்ததா? அதேபோல் கர்நாடக முதல்வர் சிவகுமாரிடம், ‘மேகதாது அணை கட்டக்கூடாது’ என சொல்லும் துணிச்சல் விஜய்க்கு உண்டா?

உங்க தி.மு.க., ஆட்சியிலும், சிவகுமார் இதையே தான் சொல்லிட்டு இருந்தாரு... அப்ப உங்க தலைவர் ஸ்டாலின், சிவகுமாரிடம் அணை கட்டக் கூடாதுன்னு சொன்னாரா?

காங்., தமிழக மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது த.வெ.க., ஆட்சியில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது. பெருந்தொகையை எதிர்பார்த்து, 112 கல்லுாரி முதல்வர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை மக்கள் வரவேற்று பாராட்டினால், இவை தொடரும்.

மக்கள் பாராட்டினாலும், பாராட்டா விட்டாலும், அரசு தன் கடமையில் இருந்து நழுவக்கூடாது... மக்கள், தங்கள் தீர்ப்பை தேர்தல் நாளில் தீர்க்கமா எழுதுவாங்க!

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கை:


கர்நாடகாவில் முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் என பல்வேறு தரப்பினரும் மேகதாது அணை கட்டுவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்களை குறைக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என முன்னாள் பிரதமர் தேவகவுடா வலியுறுத்தியிருப்பது தமிழகத்தின் காவிரி உரிமையை பாதிக்கும் செயல். இதுகுறித்து விவாதிக்க, தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
- காவிரி என்றாலே, கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாகிடுறாங்க... ஆனா, தமிழகத்தில் தான் உழக்கில் கிழக்கு மேற்கு பார்த்த கதையாக ஆளுக்கொரு பக்கமா நிற்கிறாங்க!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us